கேமரூனைப் பாராட்டிய ஒபாமா!!

264

Barack-Obama-and-David-Ca-007சிரியாவில் ஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரவாதிகள் மீது வான்தாக்குதல் நடத்த இங்கிலாந்து தீர்மானித்துள்ளது. இங்கிலாந்தின் இந்த தீர்மானமத்துக்கு அமெரிக்க ஜனாதிபதி பரக் ஒபாமா இங்கிலாந் பிரதமர் டேவிட் கேமரூனை தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு தமது பாராட்டுக்களை தெரிவித்துள்ளார். அமெரிக்க ஜனாதிபதி மாளிகை வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஈராக் மற்றும் சிரியாவின் முக்கிய நகரங்களை கைப்பற்றி தமது ஆதிக்கத்தை செலுத்தி வரும் ஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரவாதிகள், உலகுக்கே அச்சுறுத்தலாக திகழ்ந்து வருகின்றனர். இந்த நிலையில் ஈராக்கிலும், சிரியாவிலும் நிலைகொண்டுள்ள குறித்த தீவிரவாதிகளுக்கு எதிராக அமெரிக்க கூட்டுப்படைகள் தொடர்ந்து வான்தாக்குதல்கள் நடத்தி வருகின்றன

இந்த நிலையில், ஈராக்கைப் போன்று சிரியாவிலும் ஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரவாதிகள் மீது இங்கிலாந்து படைகள் வான்தாக்குதல் நடத்துவதற்கு அந்த நாட்டின் பாராளுமன்றம் ஒப்புதல் வழங்கியுள்ளது. இந்த நிலையிலேயே இங்கிலாந்தின் தீர்மானத்திற்கு பாராட்டு தெரிவித்த அமேரிக்க ஜனாதிபதி அமெரிக்க கூட்டுப்படைகளில் இணைந்து ஐ.எஸ். ஐ.எஸ் அமைப்பினருக்கு எதிராக தாக்குதல் நடத்துவதற்கு அனைத்து நாடுகளுக்கம் அழைப்பு விடுத்துள்ளார்.

இதேவேளை அமேரிக்காவின் சான்பெர்னார்டினோ நகரில் நடந்த துப்பாக்கிச்சூடு சம்பவத்தில் பலியானவர்களுக்கு இங்கிலாந் பிரதமர் கேமரூன் தனது அனுதாபங்களை தெரிவித்துள்ளதாகவும் அமெரிக்க ஜனாதிபதி மாளிகை வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.