வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள சென்னை மக்களுக்கு அனைத்து உதவிகளையும் செய்ய தயார்; அமெரிக்கா அறிவிப்பு!!

349

_87028766_87028765வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள சென்னை மக்களுக்கு தேவையான அனைத்து உதவியையும் செய்ய தயாராக உள்ளதாக அமெரிக்க அரசு அறிவித்துள்ளது. இதுதொடர்பாக, வாஷிங்டன் நகரில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சக துணை செய்தி தொடர்பாளர் மார்க் டோனர் கூறியுள்ளதாவது:-

பல ஆண்டுகளில் இல்லாத, மிகவும் மோசமான வெள்ளத்தில் சிக்கியுள்ள சென்னை மக்களுக்கு உதவி செய்ய அமெரிக்காக அரசு தயார்நிலையில் உள்ளது. இந்த வெள்ளத்தில் சிக்கி உயிரிழந்த மக்களுக்கு ஆழ்ந்த இரங்கலையும், வெள்ளம் சூழ்ந்த பகுதிகளில் இன்னும் சிக்கித்தவிக்கும் மக்கள் மற்றும் வாழ்வாதாரங்களை இழந்துவாடும் மக்களைச் சுற்றி எங்களது எண்ணங்கள் சூழ்ந்துள்ளன.

இந்த இக்கட்டான வேளையில் உதவுவதற்காக இந்திய அரசுடன் அமெரிக்க அரசு தொடர்ந்து தொடர்பில் உள்ளது. வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட சென்னை மக்களுக்கு எல்லாவித உதவியையும் செய்ய அமெரிக்கா தயார்நிலையில் இருப்பதாக நாங்கள் தெரிவித்துள்ளோம்.

இதுவரை எங்களிடமிருந்து எந்த உதவியையும் இந்திய அரசு கேட்கவில்லை. இதுபோன்ற வேளைகளில் அவசர உதவி மற்றும் பொதுச்சேவை நிலவரங்களை சுயமாக கையாளக்கூடிய அளவுக்கு இந்திய அரசு மிகவும் மேம்பாடு எய்தியுள்ளபோதிலும், குறிப்பாக, இந்தியாவைப்போன்ற வலிமையான நட்பு நாடுகளுக்கு பேரழிவுக்குப் பிந்தைய அனைத்து உதவிகளையும் செய்யவும் அமெரிக்க அரசு தயாராகவே உள்ளது. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.