இலங்கையில் புகைத்தலை கட்டுப்படுத்தாவிட்டால் 20 வருடங்களில் இறப்பவர்களின் எண்ணிக்கை 40 ஆயிரமாக உயரும்!

610

smoking

புகைத்தலை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்காது போனல் அடுத்த 20 வருடங்களில் புகைத்தல் காரணமாக மரணிப்போரின் எண்ணிக்கை 40 ஆயிரமாக உயரும் என்று உலக சுகாதார அமைப்பு எச்சரித்துள்ளது.
புகைத்தல் காரணமாக இலங்கை வருடாந்தம் 20 ஆயிரம் பேர் மரணமடைந்து வருவதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

இலங்கையில் புகைத்தலை கட்டுப்படுத்துவது தொடர்பில் விழிப்புணர்வு பிரசாரங்களை முன்னெடுக்கும் நோக்கில் உலக சுகாதார அமைப்பின் இரண்டு விசேட பிரதிநிதிகள் இலங்கை வந்துள்ளனர்.

சிகரட்டுகளை பொதி செய்யும் பெட்டிகளில் 80 வீதமான பகுதிகள் உள்ளடங்கும் வகையில் புற்றுநோய் தொடர்பான புகைப்படங்கள் அச்சிடப்பட வேண்டும் என்று அமுல்படுத்தப்பட்டுள்ள சட்டத்திற்கு எதிராக புகையிலை நிறுவனங்கள் மேற்கொண்டு வரும் நடவடிக்கைகள் சம்பந்தமாக அவர்கள் கவனம் செலுத்தி வருகின்றனர் என்றார்.