இங்கிலாந்தைப் புரட்டிப் போடும் வெள்ளம்!! (Video இணைப்பு)

397

uk_weater

பிரித்தானியாவில் இடம்பெற்றுவரும் கடும்காற்றும் மழையும் இங்கிலாந்தை பாரிய பாதிப்புக்குள் உள்ளாக்கிவிட்டது. பல ஆயிரக்கணக்கான மக்கள் இடம்பெயர்ந்துள்ளனர்.

முதலாவது மாடியை அண்மித்துள்ள நீர் உயர்ச்சியையடுத்து இங்கிலாந்து இராணுவமும், கோப்ரா படையணியும் ஈடுபட்டு மக்களை மீட்டுள்ளது. இங்கிலாந்தின் வெள்ள நீர்வடிமானக் கட்டமைப்பு முற்றாகச் செயலிழந்துள்ளதால் நீர் நிலைகள் இன்னமும் உயரும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

புயல் டெஸ்மன்ற்” என அழைக்கப்படும் இந்த பாரிய காற்று மற்றும் கடும்மழையால் வட இங்கிலாந்து மற்றும் ஸ்கொட்லாண்ட் பகுதியில் வெள்ள அளவு வரலாற்றை ஒரேநாளில் 24 அங்குலமாக உயர்ந்து பாரிய அணர்த்தத்தை விளைவித்தது.

60,000 வீடுகள் மின்சார வசதிகளை இழந்துள்ளதுடன், வாகனங்கள் வெள்ளத்தால் அடித்துச் செல்லப்பட்டன. பல ஆயிரக்கணக்கான மக்கள் செஞ்சிலுவைச் சங்க தங்குமிடங்களில் தங்க வைக்கப்பட்டனர். கடும்காற்று மழையால் இங்கிலாந்தில் இருந்து ஸ்கொட்லாண்ட் இடையே பயணம் செய்யும் பாரிய பயணிகள் கப்பலொன்று துறைமுகத்துடன் மோதுண்டு பாரிய ஓட்டையுடன் இனிப் பாவிக்க முடியாதபடி சேதமடைந்துள்ளது.

ஸ்கொட்லாண்ட் செல்லும் பாதைகள் மற்றும் கடவுப்பாதைகள் அணைத்தும் மூடப்படுகின்ற அளிவிற்கு வெள்ளத்தின் பாதிப்பு உயர்ச்சியடைந்துள்ளதோடு, ஆறுகளின் நீர் நிலைகள் உடையும் அபாயத்தையும் எட்டியுள்ளன.

குறிப்பாக பாரிய ஆறுகளில் இதுவரை காலமும் பதிவுசெய்யப்பட்ட நீர் அளவை விட ஐந்து அடி நீர் அதிகம் தேங்கியுள்ளதால் இதுவே இந்த நூற்றாண்டின் பெரிய அளவாகவும், உடைப்பெடுக்கக்கூடிய அபாயத்தை ஏற்படுத்தக் கூடியதாகவும் அமைந்துள்ளது.