வவுனியாவில் அபின் போதைப் பொருளுடன் இருவர் கைது!!

792

1 (8)

வவுனியாவில் இரண்டு கிலோகிராம் அபின் போதைப் பொருளுடன் இருவர் கைதுசெய்யப்பட்டுள்ளனர். கலால் திணைக்கள அதிகாரிகளால் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போதே இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

மேலும் கைப்பற்றப்பட்ட அபினின் பெறுமதி ஒரு கோடிக்கும் அதிகம் என கலால் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது. இதேவேளை சந்தேகநபர்கள் வல்வெட்டித்துறையைச் சேர்ந்தவர்கள் எனத் தெரியவந்துள்ளது. சம்பவம் குறித்த மேலதிக விசாரணைகளை கலால் திணைக்களம் மேற்கொண்டு வருகின்றது.