வடக்கில் காடழிப்பு மணல் அகழ்வு செயற்பாடுகளுக்கு முற்றுப்புள்ளி !!

487

1 (12)

அதி­கா­ரி­களின் எதிர்ப்­புக்­க­ளுக்கு மத்­தி­யிலும் அர­சியல் ரீதியில் முன்­னைய அர­சாங்­கத்தின் ஆட்­சிக் கா­லத்­தின்­போது தீர்­மானம் மேற்­கொள்­ளப்­பட்டதான வடக்கின் காடழிப்பு மற்றும் மணல் அகழ்வு உள்­ளிட்ட அனைத்து வகை­யி­லான சட்­ட­வி­ரோத செயற்­பா­டு­க­ளுக்கும் முற்­றுப்­புள்ளி வைக்கப்­படும்.

இத்­த­கைய சட்­ட­வி­ரோத செயற்­பா­டு­களில் ஈடு­ப­டுவோர் தொடர்பில் எந்­த­வி­த­மான தயவு தாட்­ச­யண்­ய­மு­மின்றி சட்டம் நடை­மு­றைப்­ப­டுப்­ப­டுத்­தப்­படும் என்று ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன நேற்று சபையில் தெரி­வித்தார்.

சட்­ட­வி­ரோத காட­ழிப்பு, மணல் அகழ்வு தொடர்பில் என்னால் அமைக்­கப்­ப­ட­வி­ருக்­கின்ற உயர்­மட்ட அதி­கா­ரிகள் குழு ஒரு வாரத்­தினுள் வடக்­கிற்கு விஜயம் செய்து இரண்டு வாரங்­களில் சமர்ப்­பிக்­கின்ற அறிக்­கையின் அடிப்­ப­டையில் வடக்கின் மீள்­கு­டி­யேற்றம் இடம்­பெறும் என்றும் ஜனா­தி­பதி குறிப்­பிட்டார்.

வடக்­கிற்கு செல்லும் உயர் மட்ட அதி­கா­ரி­களின் குழுவில் பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்­களும் இணைந்து கொள்­ளு­மாறு அழைப்பு விடுப்­ப­தாகத் தெரி­வித்த ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன தேவை­யான அனைத்த செல­வி­னங்­க­ளையும் தாமே பொறுப்­பேற்றுக் கொள்­வ­தா­கவும் கூறினார்.

பாரா­ளு­மன்­றத்தின் நேற்று திங்­கட்­கி­ழமை அமர்­வின்­போது இடம்­பெற்ற 2016 ஆம் நிதி­யாண்­டுக்­கான வரவு செலவுத் திட்­டத்தின் கமத் தொழில், நீர்ப்­பா­சனம், நீர்­வள முகா­மைத்­துவ அமைச்­சுக்கள் மீதான குழு­நிலை விவா­தத்தில் கலந்து கொண்டு உரை­யாற்­று­கை­யி­லேயே ஜனா­தி­பதி மேற்­கண்­ட­வாறு தெரி­வித்தார்.

ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன இங்கு தொடர்ந்தும் உரை­யாற்­று­கையில்,

மஹா­வலி, மொர­கா­கந்த நீர்ப்­பா­சன திட்­டங்­களின் நட­வ­டிக்­கைகள் மிகவும் துரி­த­மாக முன்­னெ­டுக்­கப்­பட்டு வரு­கின்­றன. அதே­போன்­றுதான் மஹா ஓயா தெற்கு நீர்ப்­பா­சனத் திட்­டத்­தி­னூ­டாக மட்­டக்­க­ளப்பு, திரு­கோ­ண­மலை மற்றும் அம்­பாறை ஆகிய மாவட்­டங்­களை உள்­வாங்கும் புதிய திட்­ட­மொன்­றுக்­கான நட­வ­டிக்­க­கை­களும் மேற்­கொள்­ளப்­பட்டு வரு­கின்­றன.

இத் திட்­டத்தின் மூலம் திரு­கோ­ண­மலை, மட்­டக்­க­ளப்பு மற்றும் அம்­பாறை ஆகிய மாவட்­டங்­களைச் சேர்ந்த மக்கள் நன்மை அடைவர். இவ் வேலைத்­திட்­டத்­திற்கு அனை­வ­ரி­னதும் ஒத்­து­ழைப்பும் எதிர்­பார்க்­கப்­ப­டு­கி­றது.

இதே­வேளை மீள்­கு­டி­யேற்ற நட­வ­டிக்­கை­க­ளுக்­கென முன்­னைய அர­சாங்­கத்தின் ஆட்­சிக்­கா­லத்­தின்­போது, அப்­போ­தி­ருந்த பொரு­ளா­தார அபி­வி­ருத்தி அமைச்சு அதி­கா­ரி­களின் எதிர்ப்­பி­னையும் மீறி காட­ழிப்­புக்­கென மன்னார் மாவட்­டத்தில் 2500 ஏக்­கர்­க­ளுக்கும் , வவு­னி­யாவில் 325 ஏக்­கர்­க­ளுக்கும் , , முல்­லைத்­தீவில் 445 ஏக்­கர்­க­ளுக்கும் , கிளி­நொச்­சியில் 65 ஏக்­கர்­க­ளுக்கும் , சட்­ட­வி­ரோ­த­மான முறையில் அனு­மதி வழங்­கப்­பட்­டது.

சட்­ட­வி­ரோத காட­ழிப்பு மற்றும் மணல் அகழ்வு தொடர்பில் எனக்கு முறைப்­பா­டுகள் கிடைத்­துள்­ளன. அதன் அடிப்­ப­டையில் இயற்கை வளங்­களை அழிப்­ப­தற்கும் சட்­ட­வி­ரோ­த­மான செயற்­பா­டு­களை அனு­ம­திப்­ப­தற்கும் முடி­யாது.

மீள்­கு­டி­யேற்ற நட­வ­டிக்­கைகள் தொடர்பில் கலந்­து­ரை­யா­டல்கள் மேற்­கொள்­ளப்­ப­ட­வேண்­டி­யதும் அவ­சியம். அத்­துடன் வடக்கில் இடம்­பெற்று வரு­கின்ற காட­ழிப்­புகள், மணல் அகழ்­வுகள் உள்­ளிட்ட அனைத்து வகை­யி­லான சட்­ட­வி­ரோத செயற்­பா­டுகள் மற்றும் மீள்­கு­டி­யேற்­றத்­துக்­கான நட­வ­டிக்­கை­க­ளையும் ஆராய்­தலின் பொருட்டு ஒரு வாரத்­தினுள் உயர்­மட்ட அதி­கா­ரிகள் குழு ஒன்றை ஸ்தாபித்து அக்­கு­ழுவை வடக்­கிற்கு அனுப்பி வைக்­க­வுள்ளேன்.

அக்­கு­ழு­வா­னது இரண்டு வாரக் காலப்­ப­கு­திக்குள் தமது ஆய்வு அறிக்­கை­யினை சமர்ப்­பிக்க வேண்டும். அந்த அறிக்கை கிடைத்­ததன் பின்னர் அறிக்­கையின் அடிப்­ப­டையில் வடக்கில் மீள்­கு­டி­யேற்றம் இடம்­பெறும். வடக்கு ஆய்­வுக்­கென செல்­கின்ற அதி­கா­ரிகள் குழுவில் பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்­களும் இணைந்து கொள்ள முடியும். அதற்­கான அனைத்து செல­வி­னங்­க­ளையும் நாம் மேற்­கொள்வோம். இக்­கு­ழுவில் இணைந்து கொள்ளும் உறுப்­பி­னர்­களும் தமது ஆலோ­ச­னை­களை முன்­வைக்க முடியும்.

மாணிக்கம்

இதே­வேளை மாணிக்­கக்கல் அகழ்வு தொடர்­பிலும் இங்கு கருத்­துக்கள் முன்­வைக்­கப்­பட்­டி­ருந்­தன. எக்­கா­ர­ணத்தைக் கொண்டும் நாம் வெ ளிநாட்­ட­வ­ருக்கு மாணிக்­கக்கல் அகழ்­வுக்­கான அனு­ம­தி­யினை வழங்­கப்­போ­வ­தில்லை. இதை நாம் அர­சாங்­கத்தின் கொள்­கை­யாக கொண்­டுள்ளோம்.

புதிய சட்டம்

மேலும் சூழல் மாசடைதலை தடுப்பதற்கு ஏதுவான வேலைத் திட்டங்களை முன்னெடுப்பதற்கு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. அந்த வகையில் 2016 ஜனவரி முதல் பொலித்தின் பாவனை தொடர்பில் புதிய சட்டத்தினை அறிமுகப்படுத்துவதற்கு நடவடிக்கைகள் எடுத்து வருகிறோம். இது தொடர்பில் வர்த்தமானி அறிவித்தல் வெ ளியாகும்.

எஸ்பெஸ்டஸ்க்கு 2018 இல் தடை

மேலும் புற்றுநோய்க்கான காரணிகளில் ஒன்றாக எஸ்பெஸ்டஸ் அமைந்துள்ளமை கண்டறியப்பட்டுள்ளதால் 2018 முதல் அதன் பாவனையைத் தடை செய்தவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது என்றார்.