வவுனியா பொது வைத்தியசாலையின் விபத்துப் பிரிவு புணரமைப்பு செய்யப்பட்டு இன்று காலை 10 மணியளவில் வடமாகாண சுகாதார அமைச்சர் வைத்தியர் ப.சத்தியலிங்கம் அவர்களினால் உத்தியோகபூர்வமாக திறந்து வைக்கப்பட்டது.
இந்நிகழ்வில் வவுனியா பொது வைத்தியசாலையின் பணிப்பாளர் வைத்தியர் கு.அகிலேந்திரன், மலேரியா தடுப்பு இயக்கப் பணிப்பாளர் திரு. எம்.மகேந்திரன், வவுனியா பிரதி பொலிஸ் உதவி அத்தியட்சகர் திரு வசந்த விக்கிரமசிங்க, பதில் பணிப்பாளர் தாதிய பயிற்சிக் கல்லூரி திரு. எ.எ.டபியூ. ஜி.ஆர்.ஆர். பண்டார, பதில் பணிப்பாளர் இளைஞர் சேவை சபை திரு. எஸ்.பி. ஜெயமகா ஆகியோர் கலந்து கொண்டதுடன் புணரமைப்பு செய்யப்பட்ட விபத்துப் பிரிவின் விடுதியினை அதிதிகள் பார்வையிட்டனர்.
வைத்தியசாலையின் வைத்தியர்கள், தாதிய உத்தியோகத்தர்கள், விடுதிச் சகோதரிகள், தாதிய பரிபாலகர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.






