வவுனியாவில் உலக எயிட்ஸ் தினம்!!(படங்கள்)

589

உலக எயிட்ஸ் தினமாக டிசம்பர் முதலாம் திகதி அனுஷ்டிக்கப்பட்டு வருகின்றது. அந்த வகையில் வவுனியா பொது வைத்தியசாலையில் ஏற்பாடு செய்யப்ட்ட எயிட்ஸ் தின விழிப்புணர்வு நிகழ்வு இன்று (08.12.2015) காலை 9 மணியளவில் வைத்தியசாலையின் கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.

இந்நிகழ்வில் பிரதம விருந்தினராக வடமாகாண சுகாதார அமைச்சர் வைத்தியர் ப.சத்தியலிங்கம் கலந்து கொண்டார். மற்றும், சிறப்பு விருந்தினராக சுகாதார வைத்திய பணிப்பாளர் திருமதி வி.பசுபதிராஜா, மலேரியா தடுப்பு இயக்கத்தின் பணிப்பாளர் வைத்தியர் எம்.மகேந்திரன், வவுனியா உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் திரு.வசந்த விக்கிரமசிங்க, திரு.ஜி.ஆர்.பண்டார, பதில் பணிப்பாளர் தாதிய பயிற்சிக் கல்லூரி, வைத்தியசாலையின் பணிப்பாளர் வைத்தியர் கு.அகிலேந்திரன், பதில் பணிப்பாளர் இளைஞர் சேவைகள் சபை எஸ்.பி. ஜெயமகா ஆகியோர் கலந்து கொண்டனர்.

விழிப்பணர்வுப் பேரணி வைத்தியசாலையிலிருந்து ஆரம்பமாகி கண்டி வீதி வழியாக சென்று மணிக்கூட்டுக் கோபுரத்தினால் பஜார் வீதி வழியாக இலுப்பையடி சந்தி சென்று மறுபடியும் வைத்தியசாலையினை சென்றடைந்து விழிப்பணர்வுக் கூட்டம் இடம்பெற்றது.

இளைஞர்கள் சேவை சபை, பொலிசார், தாதியர்கள், பயிற்சிக் கல்லூரி மாணவர்கள், வைத்தியசாலையின் ஊழியர்கள், பொது மக்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

20151208_085241 20151208_085244 20151208_085353 20151208_085358 20151208_085416 20151208_085434 20151208_085453 20151208_085515 20151208_085528 20151208_090046 20151208_090115 20151208_090120 20151208_090211 20151208_090316 P1010245 P1010248 P1010249