காதலனின் பிரிவைத் தாங்கமுடியாத காதலி தற்கொலை : மனதை உருக்கும் சம்பவம்!!

906

LOVE

காதல் இறந்த சோகம் தாங்க முடியாத பெண்ணொருவர் தானும் தற்கொலை செய்துகொண்ட சம்பவமொன்று இந்தியாவின், பெங்களூருவில் இடம்பெற்றுள்ளது. 24 வயதான பூஜா என்ற பெண்ணே இவ்வாறு தற்கொலை செய்துகொண்டுள்ளார்.

குறித்த பெண்ணின் காதலன் சரன் கடந்த வாரம் வீதி விபத்தில் உயிரிழந்துள்ளார். காதலனின் பிரிவை தாங்கிக்கொள்ள முடியாத பெண் தனது அலுவலகத்தின் 10 ஆவது மாடியிலிருந்து குதித்து தற்கொலை செய்துகொண்டுள்ளார்.

காதலனின் இறுதிச் சடங்கில் கலந்து கொண்ட அவர் அதன் பின்னர் மன அழுத்தத்தில் இருந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.

அவர் தனது பெற்றோருக்கு இறுதியாக எழுதிய கடித த்தில் அவர்களிடம் மன்னிப்பு கோரியுள்ளதுடன் சரண் இல்லாமல் தன்னால் வாழமுடியாது எனவும் குறிப்பிட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.