நாட்டின் பல பகுதிகளிலும் கன மழை : கொழும்பு வீதிகளில் வாகன நெரிசல்!!

752

Rain

கொழும்பு உள்ளிட்ட நாட்டின் பல பகுதிகளிலும் கன மழை பெய்து வருகிறது.

கொழும்பின் வீதிகள் பல நீரில் மூழ்கியுள்ளமையால் பிரதான வீதிகளில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.

வடக்கு, வட மத்திய மற்றும் கிழக்கு மாகாணங்களில் இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.

இதேவேளை, மழைப்பொழிவு 150 மில்லிமீட்டருக்கும் அதிகமாக இருக்கும் எனவும் நாளைய தினம் 100 மில்லிமீட்டருக்கும் அதிக மழைப் பொழிவை எதிர்பார்க்க முடியும் எனவும் திணைக்களம் சுட்டிக்காட்டியுள்ளது.