அமெரிக்காவில் ஓடிப்போன கழுதையை, கைது செய்த போலீஸார் !

315

kkkk.w540

அமெரிக்காவில் ஓடிப்போன கழுதையை, போலீஸார் கைது செய்த செய்தி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்தியாவின் உத்திர பிரதேசத்தில், தங்களின் காணாமல் போன எருமைகளை தேடி தர சொல்லி அமைச்சர் உத்தரவு வழங்கிய சம்பவம், சில மாதங்களுக்கு முன் நிகழ்ந்தேறி, பரபரப்பை உண்டாக்கியது.

அத்தகைய ஒரு சம்பவம், அமெரிக்காவின் ஒக்லஹாமா என்ற பகுதியிலும், சில தினங்களுக்கு முன் நடந்துள்ளது. ஒக்லஹாமாவில் உள்ள நார்மன் என்ற நகரத்தில், வீட்டில் இருந்து ஓடிப்போன ஒரு கழுதை, நகரின் சாலைகளில் அதன் போக்கில் சுற்றி திரிவதாக போலீஸாருக்கு புகார் வந்தது.

இதையடுத்து, கைல் கேனான் என்ற அந்த நகரின் போலீஸ் அதிகாரி, அந்த கழுதையை தேடும் பணியில் தீவிரமாக ஈடுபட்டார். வெற்றிகரமாக, அந்த கழுதையை கண்டுபிடித்த போலீஸ் அதிகாரி கேனான், அதை கைது செய்து தனது போலீஸ் க்ரூஸர் காரின் பின் சீட்டிலேயே பிடித்து கொண்டு சென்றார்.

அதன்பின், அந்த கழுதையை ஒரு பாதுகாப்பான இருப்பிடத்தில் கொண்டு சேர்த்தார் கேனான். சில தினங்களில், அந்த கழுதையை வளர்த்தவர் யார் என கண்டறியபட்டு, அவரிடம் அந்த கழுதை பத்திரமாக ஒப்படைக்கபட்டது. எவ்வளவு தான், கிடைத்த புகாருக்காக கழுதையை தேடி, கைது செய்யும் நடவடிக்கை எடுத்ததாக கேனான் திருப்தி அடைந்தாலும், காரை சுத்தபடுத்த வேண்டிய பணி கூடுதலாகியது.