விபத்தை ஏற்படுத்திவிட்டு தப்பி சென்ற சாரதி: சோதனை நடத்த சென்ற பொலிசாருக்கு காத்திருந்த அதிர்ச்சி!!

338

hemp_acci_002

சுவிஸில் விபத்தை ஏற்படுத்திவிட்டு தப்பி சென்ற சாரதியை கைது செய்ய சென்ற பொலிசார், அவரது வீட்டில் அதிகளவு போதைப்பொருட்கள் இருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தனர். சுவிட்சர்லாந்தின் கோஸ்ஸவ்(Gossau) நகர சாலையில் கடந்த ஞாயிறுன்று கார் ஒன்று விபத்துக்குள்ளது.

சாலையில் ஒரத்திலேயே காரை செலுத்தி வந்த சாரதி புற்கள் மற்றும் செடிகளில் நிறைந்த பகுதியில் காரை மோதியுள்ளார். பின்னர் அங்கிருந்த தப்பி சென்றுவிட்டதாக கூறப்படுகிறது. இது தொடர்பாக அந்த நபரை தேடிவந்த St. Gallen மண்டலத்தின் பொலிசார் அவரது வசிப்பிடத்தை கண்டுபிடித்தனர்.

இதையடுத்து அவரது வீட்டில் பொலிசார் அதிரடி சோதனை நடத்தினர். அப்போது, வீட்டினுள் கஞ்சா செடி பயிரிடப்பட்டிருப்பதையும், ஏராளமான கஞ்சா போதைப்பொருள் அவரது வீட்டில் இருப்பதையும் கண்டு அதிர்ச்சியடைந்தனர்.பின்னர் அந்த நபர் போதைப்பொருள் உட்கொண்டுள்ளாரா என்பதை கண்டுபிடிப்பதற்காக அவரது ரத்தம் மற்றும் சிறுநீர் மாதிரிகளை சேகரிக்கப்பட்டது.இறுதியில், 29 வயது மதிக்கத்தக்க அந்த நபரை பொலிசார் கைது செய்தனர்.