வவுனியா கார்கில்ஸ் புட்சிட்டிக்கு முன்பாக இன்று(09.12.2015) மதியம் 12.30 மணியளவில் வவுனியா வங்கி ஊழியர்கள் வரவு செலவுத்திட்டத்திற்கு எதிராக ஆர்ப்பாட்டம் ஒன்றை மேற்கொண்டனர்
வங்கிகளுக்கு சார்பற்ற வரவு செலவுத்திட்டத்திற்கு எதிராகவே இன்றைய ஆர்ப்பாட்டம் இடம்பெற்றுவருவதாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் தெரிவித்தனர்.
இந்த ஆர்ப்பாட்டத்தில் வவுனியாவில் உள்ள வங்கிகளின் ஊழியர்கள் கலந்துகொண்டனர்.
கடந்த 2015 டிசம்பர் 03ஆம் திகதி கொழும்பு கோட்டை புகையிரத நிலையத்திற்கு முன்பாக இலங்கை வங்கி ஊழியர்கள் மேற்கொண்ட ஆர்ப்பாட்டத்திற்கு ஆதரவாகவே இன்று இவ் ஆர்ப்பாட்டம் இடம்பெற்றது.
‘லீசிங் கடன் நிறுத்தியாயிற்று அடைவுகளையும் வெட்டியாயிற்று வங்கிகளுக்கு தலையிலே இடி தூக்கு மேடைக்கு வழியையும் செய்தாச்சு’ போன்ற வாசகங்களை ஏந்தியவாறு வங்கி ஊழியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இவ் ஆர்பாட்டம் 12.30 மணிமுதல் 1.30 மணிவரை ஒரு மணிநேரம் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.






