கிளிநொச்சியில் எந்த நேரமும் வீடுகளுக்குள் முதலைகள் நுழையலாம் : அச்சத்தில் மக்கள்!!

679

Muthalai

கிளிநொச்சி மாவட்டத்தில் கடந்த ஒரு மாத்திற்கும் மேலாக சீரற்ற காலநிலை தொடர்ந்த நிலையில் முதலைகளின் தொல்லையும் அதிகரித்துள்ளது.

இந்த நிலையில் நேற்று முன்தினம் முதல் பெய்த கடும் மழையினால் கிளிநொச்சியின் பல பகுதிகளில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டது. இதனை அடுத்து கிளிநொச்சியில் முதலைகளின் தொல்லை ஏற்பட்டுள்ளது.

இதனால் வீடுகளுக்குள் முதலைகள் நுழையலாம் என்ற பயத்தில் பொழுதை கழிப்பதுடன், சிறுபிள்ளைகளுடன் வாழும் குடும்பத்தினர் இந்த வெள்ள காலநிலையை சிரமத்துடன் கழிப்பதாக தெரிவிக்கின்றனர்.

கிளிநொச்சி, இரத்தினபுரம் பகுதியில் நேற்றிரவு முதலை ஒன்று வீட்டுக்குள் நுழைந்தது. இரவு ஒரு மணியளவில் வீட்டிற்குள் ஆட்கள் உறங்கிக்கொண்டிருந்தபோது முதலை வீட்டுக்குள் நுழைந்துள்ளது.

இதேவேளை நேற்று முன்தினம் இரவு இரத்தினபுரம் கிழக்குப் பகுதியிலும் பெரிய முதலை ஒன்று வீட்டை நோக்கி வந்துள்ளது.

அத்துடன் கடந்த மூன்று நாட்களின் முன்னர் கிளிநொச்சி திருவையாற்றுப் பகுதியிலும் முதலை ஒன்று வீட்டுக்குள் நுழைந்து அதனை பிடித்த மக்கள் வன ஜீவராசிகள் திணைக்களத்திடம் ஒப்படைத்த சம்பவமும் இடம்பெற்றுள்ளது.