போலியாக தயாரிக்கப்படும் கோழி முட்டைகள்

356

1012USAfoodsafetybill

சீனா கோழி முட்டைகளை போலியாக தயாரிக்கத் தொடங்கியுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. கால்சியம் கார்பனேட், ஸ்டார்ச், ரெசின், ஜெலட்டின், அலுமினியம் உள்ளிட்ட 7 வித ரசாயனங்களை கொண்டு போலி முட்டை தயாரிக்கப்படுகிறது.

கடந்த சில வருடங்களாகவே இந்த போலி முட்டை தயாரிக்கும் நடவடிக்கைகளில் சீனா ஈடுபட்டுள்ளதாகவும், தற்பொழுது இந்த போலி முட்டைகள் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

நிஜ முட்டையை விட போலி முட்டை சுவை அதிகமாக உள்ளது என பொதுமக்கள் தெரிவித்துள்ளனர். போலி முட்டையை உண்பதால் உடலில் சிறிது சிறிதாக விஷம் ஏறுகிறது என்றும் இதன் விளைவுகள் மோசமாக இருக்கும் என்றும் உணவுத்துறை நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.