யானையுடன் புகையிரதம் மோதியதால் யாழ்ப்பாணத்திற்கான புகையிரத சேவை மாங்குளத்துடன் தடைப்பட்டது. இச் சம்பவம் தொடர்பாக தெரியவருவதாவது..
நேற்று (10.12.2015) கொழும்பிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கி பயணித்த புகையிரதம் மாலை 6.30 மணியளவில் கனகராயன்குளம் பகுதியில் புகையிரதப்பாதையில் நின்ற யானையுடன் மோதி விபத்திற்குள்ளாகியுள்ளது.
இதனால் புகையிரதம் பழுதடைந்தமையினால் மாங்குளத்துடன் புகையிரத சேவை நிறுத்தப்பட்டது.
பயணிகள் புகையிரதத் திணைக்கள அதிகாரிகளின் செயற்பாட்டால் விசேட பேருந்துகள் மூலம் யாழ்ப்பாணத்திற்கு அனுப்பிவைக்கப்பட்டனர்.






