15 ஆண்டுகளுக்கு பிறகு டெஸ்ட் கிரிக்கெட்டில் நிகழ்த்தப்பட்ட சாதனை!!

233

aus_wi_002

அவுஸ்திரேலியா- மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டி ஹோபர்டில் இன்று தொடங்கியது.நாணய சுழற்சியில் வெற்றி பெற்று முதலில் துடுப்பெடுத்தாடிய அவுஸ்திரேலியா, முதல் நாள் ஆட்ட முடிவில் 89 ஓவர்கள் முடிவில் 3 விக்கெட் இழப்பிற்கு 438 ஓட்டங்கள் குவித்தது.

தொடக்க வீரர்களாக இறங்கிய ஜோ பர்ன்ஸூம், வார்னரும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர்.இருவரும் இணைந்து 10 ஓவரில் 70 ஓட்டங்கள் எடுத்தனர், கடந்த 15 ஆண்டுகளுக்குப் பிறகு டெஸ்ட் போட்டியில் முதல் 10 ஓவரில் 70 ஓட்டங்கள் குவிப்பது இதுதான் முதல்முறையாகும்.