சவுதி அரேபிய வரலாற்றில் முதன் முறையாக தேர்தலில் வாக்களிக்கும் பெண்கள்: உரிமைகள் மீட்கப்படுகிறதா??

279

2941798-3x2-940x627

சவுதி அரேபிய வரலாற்றிலேயே முதன் முறையாக அந்நாட்டு தேர்தலில் பெண்கள் வாக்களிக்க அனுமதிக்கப்பட்டுள்ளது பொதுமக்கள் மத்தியில் பெரும் வரவேற்பையும் உற்சாகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.சவுதி அரேபியாவில் ஜனநாயக ரீதியாக தேர்தல் நடப்பது என்பது மிக அரிது. அவ்வாறு நடந்தாலும், அந்த தேர்தலில் வாக்களிக்க பெண்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டு வந்துள்ளது.

ஆச்சரியமூட்டும் வகையில், சவுதி அரேபிய வரலாற்றில் 3 முறை மட்டுமே தேர்தல்கள் நடந்துள்ளது.அதேபோல், உலக நாடுகளில் பெண்களை வாகனங்களை ஓட்ட அனுமதி மறுக்கப்படும் ஒரே நாடு சவுதி அரேபியா என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த சூழலில், கடந்த ஜனவரி மாதம் உயிரிழந்த சவுதி அரேபியாவின் முன்னாள் மன்னரான அப்துல்லா, பெண்களுக்கு தேர்தலில் வாக்களிக்கும் ஒரு வரலாற்று சட்டத்தை கொண்டு வந்தார்.இது தற்போது நனவாக மாறியுள்ளது. சவுதி அரேபியாவில் ரகராட்சி தேர்தல்கள் இன்று முதல் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

முக்கியமாக, அந்நாட்டு வரலாற்றில் முதன் முறையாக பெண்கள் வாக்களிக்க அனுமதிக்கப்பட்டுள்ளதுடன், அவர்களுன் தேர்தலில் வேட்பாளராக போட்டியிடுவது பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.இன்று நடைபெற்று வரும் தேர்தலில் 1.30,000 பெண்கள் வாக்களிக்க அனுமதிக்கப்பட்டுள்ளனர். எனினும், இந்த எண்ணிக்கையை விட அதிகமாக 10 லட்சத்து 35 ஆயிரம் ஆண்கள் வாக்களிக்க உள்ளனர்.

அதே சமயம், தேர்தலில் வேட்பாளராக போட்டியிட 978 பெண்களும், 5,938 ஆண்களும் அனுமதிக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.சவுதி அரேபிய வரலாற்றில் முதன் முறையாக பெண்கள் வாக்களிக்கவும், தேர்தலில் போட்டியிடவும் அனுமதிக்கப்பட்டுள்ளது அவர்களது அடிப்படை உரிமைகளை மீட்கப்பட்டு வருவதாக பார்க்கப்படுகிறது.