கடும் மாசு பாதிப்பில் சிக்கி தவிக்கும் பீஜிங் நகரம்: வைரலாக பரவும் புகைப்படங்கள்!!

280

china_pollution_003

சீனாவின் தலைநகர் பீஜிங் காற்று மாசுவினால் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது தொடர்பான புகைப்படங்கள் இணையத்தில் வைரலாக பரவி வருகிறது. உலக அளவில் மக்கள் தொகையில் முதலிடத்தில் சீனா உள்ளது. இந்நாட்டின் தலைநகர் பீஜிங் நகரில் சுமார் 1 கோடியே 20 லட்சம் மக்கள் வசிப்பதாக கூறப்படுகிறது.

இதனிடையே தொழிற்சாலைகள் மற்றும் வாகனங்கள் ஆகியவற்றில் இருந்து வெளியேறும் புகை காரணமாக இந்நகரம் மிகவும் மாசு அடைந்துள்ளது.

இதனால் பகல் நேரத்தில் கூட நகரம் தெரியாதவாறு தூசு படர்ந்துள்ளது.இதையடுத்து அங்கு முதல் முறையாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது மட்டுமல்லாமல் கட்டுமான பணிகள் அனைத்தையும் நிறுத்த உத்தரவிடப்பட்டுள்ளது.

மேலும் சாலைகளில் செல்லும் வாகனங்களுக்கும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் பீஜிங் நகரை சேர்ந்த இணைய பயண்பாட்டாளர் ஒருவர் அந்நகரில் உள்ள புகழ்பெற்ற கட்டிடங்களை புகைப்படம் எடுத்துள்ளார்

அப்போது, அந்த இடத்தின் பழைய நிலை தொடர்பான புகைப்படங்களையும் கையில் வைத்துள்ளார். இதன் மூலம் நகரம் எவ்வளவு மாசு அடைந்துள்ளது என்பதை இணையத்தில் பதிவேற்றியுள்ளார்.இந்த புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாக பரவி வருகின்றன.

china_pollution_004

 

china_pollution_005