மன்னார் புதைகுழி எலும்பு கூடுகளை வெளிநாட்டில் பரிசேதனை செய்ய உத்தரவு!!

519

gavel

மன்னார் திருக்கேதீஸ்வரம் மனிதப் புதைகுழியில் இருந்து கண்டெடுக்கப்பட்ட மனித எலும்புகளை வெளிநாட்டிற்கு அனுப்பி பரிசோதனை செய்வதற்கு மன்னார் நீதவான நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அங்கு கண்டெடுக்கப்பட்ட மனித எலும்புகூடுகளை யூகோஸ்லாவியா, ஆர்ஜென்டீனா அல்லது கௌதமாலா போன்ற ஏதேனும் ஒரு நாட்டிற்கு அனுப்பி டீ.என்.ஏ பரிசோதனை அறிக்கை பெற்றுக் கொள்ளுமாறு மன்னார் நீதவான் எம். எலக்ஸ் ராஜா உத்தரவிட்டார்.

2013ம் ஆண்டு டிசம்பர் மாதம் மன்னார் திருக்கேதீஸ்வரம் பகுதியில் அகழ்வுப் பணியில் ஈடுபட்டிருந்த குழுவொன்றினால் மனித எலும்புகூடுகள் கண்டுபிடிக்கபபட்டன. முன்னதாக, பல ஆண்டுகளுக்கு முன்னர் வாழ்ந்த கிராமவாசிகள் இறந்தவர்களைப் புதைப்பதற்காகப் பயன்படுத்திய புதைகுழி இருந்த இடம் இதுவென்று சம்பவம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்ட குற்றப் புலனாய்வு திணைக்களம் நீதிமன்றில் தெரிவித்திருந்தது.

எனினும் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து தன்னார்வ அமைப்புக்கள் பல நீதிமன்றில் மனு தாக்கல் செய்திருந்தது. இறுதி யுத்த காலத்தில் காணாமல் போயிருந்தவர்கள் கொலை செய்யப்பட்டு அந்த இடத்தில் இரகசியமாகப் புதைக்கப்பட்டிருக்கலாம் என்று அவர்கள் தெரிவித்திருந்தனர். இந்த நிலையில் குறித்த மனித எலும்புகூடுகளை வெளிநாட்டிற்கு அனுப்பி பரிசோதனை செய்வதற்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.