குழந்தைகளுக்காக பொம்மைக் கடையையே பரிசளித்த பெண்!!

330

aboutus2

ஆதரவற்றோர் இல்லங்களில் வசிக்கும் நியூயார்க் நகர குழந்தைகளுக்காக பொம்மைக் கடையையே பரிசளித்த பெண் அனைவரது பாராட்டுக்களையும் பெற்று வருகின்றார்.

தொழில்நுட்ப நிறுவனங்களுக்கென மக்கள் தொடர்பு சேவையளிக்கும் நிறுவனத்தை தனது கணவரோடு இணைந்து நடத்திவரும், கரோல் சச்மேன் என்ற நியூயார்க் நகரப் பெண், ஒவ்வொரு ஆண்டும் கிறிஸ்துமஸ் விழாக் காலத்தில் ஆதரவற்றோர் இல்லங்களில் வசிக்கும் குழந்தைகளுக்காக பொம்மைகள் வாங்கி பரிசளிப்பதை வழக்கமாகக் கொண்டுள்ளார்.

சமீபத்தில் நியூயார்க் நகர வீதியொன்றில் ‘பொம்மைக் கடை விற்பனைக்கு’ என்ற வாசகத்தைப் பார்த்த கரோல், உடனடியாக அந்தக் கடையையே விலைக்கு வாங்கிவிட்டார். கிறிஸ்துமஸ் விழாவின்போது, சாண்டா க்ளாஸ் தாத்தா குழந்தைகளுக்கு பரிசளிப்பதற்காக அந்தக் கடையினை நியூயார்க் நகரின் ஆதரவற்றோர் இல்லத்துக்கு நன்கொடையாக அவர் வழங்கியுள்ளார்.

நியூயார்க் நகரின் ஆதரவற்ற இல்லங்களின் நிர்வாகி ஆண்டோனியோ ரோட்ரிகஸ் கரோலைப் பற்றி கூறும்போது, ‘பொதுவாக இதுபோன்ற விழா நேரங்களில் சில நபர்கள் பெருந்தன்மையுடன் தம்மால் இயன்ற அளவு பொம்மைகளை பரிசளிப்பர். இதுவரை இந்தக் குழந்தைகளுக்காக முழு பொம்மைக் கடையையும் நன்கொடையாக எவரும் வழங்கியதில்லை’ என்றார்.