வவுனியாவில் அடைமழை : 104 பேர் தற்காலிக நலன்புரி நிலையத்தில்!!

632

வவுனியாவில் பரவலாக மீண்டும் தொடர்மழை ஆரம்பித்துள்ளது. கடந்த இரு நாட்களாக பெய்த கடும் மழையினால் 94 குடும்பங்களை சேர்ந்த 389 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக வவுனியா மாவட்ட அனர்ந்த முகாமைத்துவ நிலையத்தின் உதவிப்பணிப்பாளர் ரி.என். சூரியராஜா தெரிவித்தார்.

மழை காரணமாக 3 வீடுகள் முழுமையாக சேதமடைந்துள்ளதாகவும், 4 வீடுகள் பகுதியளவில் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

பாதிக்கப்பட்ட 30 குடும்பங்களை சேர்ந்த 104 பேர் தற்காலிக நலன்புரி நிலையத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டார்.

1 2