பசியால் அழுத குழந்தைக்கு இரக்கம் காட்டிய கொள்ளையர்கள்.!

368

baby

இந்தோனேஷியாவில் பசியால் அழுத குழந்தையை தூங்க வைத்து விட்டு லட்சக்கணக்கில் கும்பலொன்று திருடி சென்றது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்தோனேஷியாவின் தம் காசாங் என்ற ஊரில் உள்ள வீட்டில் நள்ளிரவில் 5 பேர் கொண்ட கொள்ளை கும்பலொன்று புகுந்தது. வீட்டிற்குள் இருந்த ஆண்கள், பெண்கள் அனைவரையும் கயிற்றில் கட்டிப் போட்டு விட்டு வீட்டில் இருக்கும் பொருட்களை திருடுவதில் தீவிரமாக இருந்தனர்.

அப்போது தூங்கி கொண்டிருந்த குழந்தை பசியால் அழத் தொடங்கியது. உடனே செய்வதறியாக நின்ற கொள்ளையர்கள் தாயிடம் சென்று அழுகையை நிறுத்த என்ன செய்ய வேண்டும் என கேட்க 2 கரண்டி பாலுடன் சிறிது வெந்நீர் கலந்து கொடுக்கும்படி கூறினார்.

அதன்படியே அவன் செய்ய பாலை பருகியதும் குழந்தை அயர்ந்து தூங்கி விட்டது. படுக்கையில் கொண்டு குழந்தையை வைத்து விட்டு சுமார் 2½ லட்சம் பெறுமான பொருட்களை சுருட்டிக் கொண்டு கும்பல் தப்பி ஓடியது.

இதனையடுத்து பாதிக்கப்பட்ட குடும்பத்தினர், பொலிசாரிடம் புகார் அளிக்கவே கொள்ளை கும்பல் தலைவன் உட்பட 4 பேரை பிடித்தனர் ஒருவன் மட்டும் சுட்டுக் கொல்லப்பட்டான். பயங்கர ஆயுதங்களுடன் சென்று கொள்ளையில் ஈடுபட்ட இந்த கும்பலுக்கு 10 ஆண்டு சிறைத் தண்டனை கிடைக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.