
வடமாகாண சபையில் வவுனியாவைப் பிரதிநிதித்துவப்படுத்தும் உறுப்பினர் எம்.பி.நடராஜ் அவர்களால் வடமாகாண சபையின் 40வது அமர்வில் முன்வைக்கப்பட்டபிரேரணை வருமாறு..
வவுனியா மாவட்டத்தின் பல இடங்களில் இருந்து போர் மற்றும் அச்சம் காரணமாக பிறமாவட்டங்களுக்கும் இந்தியா மற்றும் ஏனைய வெளிநாடுகளுக்கும் புலம்பெயர்ந்த மக்களின் காணிகளையும் வேறுபல பொதுத் தேவைகளுக்காக ஒதுக்கப்பட்ட பொதுக் காணிகளையும் அண்மைகாலமாக வனபரிபாலனத் திணைக்களம் தனது எல்லைக்குட்படுத்தி வருகின்றது.
இதனால் தனக்கு சொந்தமான காணிகளை இழக்கும் நிலை இப் புலம்பெயர்ந்த மக்களுக்கும் ஏற்பட்டிருக்கின்றது. இவர்கள் மீண்டும் சொந்த இடங்களுக்கு திரும்பி வரும்போது காணிகளற்ற நாடோடிகளாகிவிடுவர்.
அதேபோன்று பொதுத் தேவைக்காக ஒதுக்கப்பட்ட காணிகளிலும் பொதுத் தேவைகளை நிறைவேற்ற முடியாத நிலைமைகளே ஏற்படும்.
எனவே எமது மக்களின் அடிப்படைத் தேவையை கருத்திற்கொண்டு வனபரிபாலனத் திணைக்களத்தின் இச் செயற்பாடுகளை உடன்நிறுத்த நடவடிக்கை எடுக்கவேண்டுமென காணி அமைச்சர் என்ற வகையில் கௌரவ முதலமைச்சர் அவர்களை இச்சபை கோருகின்றது.





