
பிரதமருக்கு எதிரான மனுவொன்றில் கையெழுத்திட அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் தீர்மானித்துள்ளது. நெர்ருகாலை கூடிய சங்கத்தின் மத்திய செயற்குழு குறித்த முடிவை எடுத்துள்ளதாக, அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் செயலாளர் நலிந்த ஹேரத் குறிப்பிட்டுள்ளார்.
அண்மையில் பிரதமர் ரணில் விக்ரமசிங்க அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் குறித்து கூறிய கருத்துக்களுக்கு எதிராகவே இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. மேலும் குறித்த மனுவை நாளை பிரதமர் அலுவலகத்தில் ஒப்படைக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக, நலிந்த ஹேரத் சுட்டிக்காட்டியுள்ளார். இதேவேளை, பிரதமர் ரணில் விக்ரமசிங்க இன்று பாராளுமன்றத்தில் விஷேட உரையொன்றை ஆற்றவுள்ளார்.
தொழிற்சங்கங்களுடன் இடம்பெற்ற கலந்துரையாடலில் முன்வைக்கப்பட்ட கோரிக்கைகள் தொடர்பில் அரசாங்கத்தின் நிலைப்பாடு என்ன என்பது குறித்து தௌிவுபடுத்தும் வகையில் இந்த உரை அமையவுள்ளதாக, பிரதமர் அலுவலகம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.





