
டெல்லியில் 12 வயது மகளை பாலியல் பலாத்காரம் செய்த தந்தையை பொலிசார் கைது செய்துள்ளனர்.மத்திய டெல்லிக்கு பீஹாரைச் சேர்ந்த நபர் ஒருவர் தனது மனைவி மற்றும் 12 வயது மகளுடன் வந்துள்ளார்.
அவர்கள் அங்கு பஹர்கஞ்ச் பகுதியில் இருக்கும் ஹொட்டல் ஒன்றில் ஒரு இரவுக்கு அறை எடுத்து தங்கியுள்ளனர்.அப்போது அந்த நபரின் மனைவி வெளியே சென்ற நேரத்தில் அவர் தனது மகளை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார்.
மேலும், அம்மாவிடம் இதை கூறாதே என்று கூறி, பரிசுப் பொருட்கள் வாங்கிக் கொடுத்துள்ளார்.பின்னர் அந்த சிறுமி தனது தாயிடம் ஹொட்டல் அறையில் நடந்தவற்றை விவரித்துள்ளார். இதையடுத்து அந்த சிறுமியின் தாய் பஹர்கஞ்ச் காவல் நிலையத்திற்கு சென்று தனது கணவர் மீது புகார் அளித்துள்ளார். அவரது புகாரின்பேரில் வழக்குப்பதிவு செய்த பொலிசார் அந்த நபரை கைது செய்துள்ளனர்.





