காதலனை கைபிடிக்க அமெரிக்காவை விட்டு வெளியேறி சுவிஸில் குடியேறும் கோடீஸ்வரரின் மகள்!!

312

paris_hilton_002

சுவிட்சர்லாந்து நாட்டில் உள்ள காதலனுடன் சேர்ந்து வாழ்வதற்காக அமெரிக்க கோடீஸ்வரரின் மகள் ஒருவர் அந்நாட்டை விட்டு வெளியேறி சுவிஸில் குடியேற உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.அமெரிக்காவில் பல ஹொட்டல்களுக்கு அதிபதியான கோடீஸ்வரர் ஒருவரின் ஒரே மகள் Paris Hilton(34).இவர் சுவிஸில் குடியுரிமை பெற்று வசித்து வரும் ஆஸ்திரிய நாட்டு தொழிலதிபரான தோமஸ் கிராஸ்(39) என்பரை காதலித்து வருகிறார்.

பிரான்ஸில் கடந்த மே மாதம் நடைபெற்ற கென்னெஸ் திரைப்பட விழாவில் இருவரும் சந்தித்தபோது பழக்கம் ஏற்பட்டு அது காதலாக மாறியுள்ளது. இதனை தொடர்ந்து, காதலனை சந்திக்க பாரீஸ் ஹில்டன் அடிக்கடி சுவிஸ் நாட்டிற்கு பயணம் மேற்கொண்டு வருகிறார்.

பாரீஸிற்கு சுவிஸின் Schwyz மாகாணத்தில் உள்ள Schindellegi என்ற சிறிய கிராமப்புற பகுதியில் சொந்தமாக மாளிகை ஒன்று உள்ளது. இந்த மாளிகையில் தற்போது இருவரும் வசித்து வருகின்றனர். எனினும், காதலனுடன் நிரந்தரமாக தங்க விரும்புவதால் அவர் சுவிஸ் குடியுரிமை பெறுவதற்கு விண்ணப்பம் செய்துள்ளார்.

இதன் முதற்கட்டமாக Feusisberg மாநகராட்சியில் சுவிஸ் குடியுரிமை பெறுவது தொடர்பாக விண்ணப்பம் செய்துள்ளார்.இது குறித்து அண்மையில் பாரீஸ் பேசியபோது, ‘சுவிஸ் நாட்டில் நடைமுறையில் உள்ள ஒவ்வொரு விடயமும் என்னை மிகவும் கவர்ந்துள்ளது.

மக்கள் அனைவரும் அன்பாக பழகுகின்றனர். இங்குள்ள உணவுகள் மிகவும் சுவையாகவும் விதவிதமாகவும் உள்ளது. அதேபோல், சுவிஸ் நாட்டின் இயற்கை காட்சிகளை ஒருபோதும் மறக்க முடியாது’ என சுவிஸ் நாட்டை புகழ்ந்துள்ளார்.மேலும், சுவிஸ் நாட்டு குடிமகளாக மாறி தன்னுடைய காதலனுடன் சேர்ந்து வாழ முடிவு செய்துள்ளதாகவும், அதற்கான முயற்சிகளில் தற்போது ஈடுப்பட்டு வருவதாகவும் பாரீஸ் உற்சாகமாக தெரிவித்துள்ளார்.