
அரசாங்க ஊழியர்களுக்கு 10,000ரூபா கொடுப்பனவை, அடுத்த வருடம் முதல் மூன்று கட்டங்களாக அவர்களது அடிப்படை சம்பளத்தில் இணைக்கவுள்ளதாக, பிரதமர் ரணில் விக்ரமசிங்க குறிப்பிட்டுள்ளார்.
இதன்படி முதற்கட்டமாக 2000 ரூபாய் அடிப்படைச் சம்பளத்தில் இணைக்கவுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார். இன்று பாராளுமன்றத்தில் ஆற்றும் விஷேட உரையிலேயே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.
மேலும் புதிதாக இணைக்கப்படும் அரசாங்க ஊழியர்களுக்கான ஓய்வூதியம் நீக்கப்படாது எனவும் அவர் இதன்போது மேலும் குறிப்பிட்டுள்ளார்.





