
அஜித் எப்போதும் பல முடிவுகளை மிகவும் தைரியமாக எடுப்பார். அந்த வகையில் இந்திய சினிமாவில் சூப்பர் ஸ்டார் என்றால் அது ரஜினிகாந்த் மட்டுமே.அவர் படத்தை ரீமேக் செய்யவேண்டும் என்றால் எத்தனை பெரிய சவால், அப்படி ஒரு சவாலை தன்னால் சமாளிக்க முடியும் என அசாத்திய தைரியத்துடன் விஷ்ணுவர்தனுடன் களம் இறங்கிய படம் தான் பில்லா.
இப்படம் வெளிவந்து இன்றுடன் 8 வருடம் ஆகின்றது. இதை ரசிகர்கள் #8YearsOfBlockbusterBILLA என்ற டாக் கிரியேட் செய்து இந்திய அளவில் ட்ரண்ட் செய்தனர்.அஜித் திரைப்பயணத்தில் மட்டுமில்லை தமிழ் சினிமாவிற்கு இப்படம் ஒரு மைல் கல் தான்.
ஏனெனில் அதுவரை இத்தனை ஸ்டைலிஷான ஒரு படத்தை வட இந்தியா மட்டும் ரசித்து வந்த நிலையில் அதை தமிழ் ரசிகர்களுக்கு அளித்தது பில்லா டீம். படக்குழுவினர்கள் அனைவருக்கும் பில்லா 8வது வருடத்தை முன்னிட்டு வாழ்த்துக்கள்.





