இதோ வந்துவிட்டது மடித்து எடுத்துச்செல்லக்கூடிய ஸ்மார்ட் கைப்பேசி!!

461

fold_computer_003

இன்று அதிகளவானவர்களின் கைகளிலும் தவளும் ஸ்மார்ட் கைப்பேசிகள் அனைவரையும் கவரும் வகையில் மிகவும் மெலிதான வடிவம் கொண்டவை.இதேவேளை சம்சுங் நிறுவனம் மடித்து எடுத்துச்செல்லக்கூடிய ஸ்மார்ட் கைப்பேசியினையும் வடிவமைக்க தயாராகியுள்ளது.

இதில் இணைக்கப்படவுள்ள தொடுதிரையும் வளையும் அல்லது மடிக்கும் தன்மை உடையதாக இருத்தல் விசேட அம்சமாகும். இது தொடர்பான தகவல்கள் கடந்த 2014ம் ஆண்டே வெளியாகியிருந்தபோதும் தற்போதே குறித்த திட்டத்தினை செயன்முறைப்படுத்த முழு மூச்சுடன் களமிறங்கியுள்ளது சம்சுங்.

மேலும் சம்சுங் நிறுவனமே முதன் முதலில் வளைந்த தொடுதிரையினைக் கொண்ட ஸ்மார்ட் கைப்பேசியினை முதன் முதலாக அறிமுகம் செய்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.