பொம்மைக் கல்யாண ஜோடி-17 ஆண்டுகளுக்குப் பின்பு நிஜ தம்பதியான அதிசயம்!!

335

doll_marriage_002.w540

கிறிஸ்தவ திருமணங்களில் மணமகன், மணமகள் போல உடையலங்காரத்துடன் திருமணத்துக்கான மோதிரத்தைக் கொண்டுவரும் சிறுவனும் (ரிங் பேரர்), பூக்கூடைத் தூக்கிவரும் சிறுமியும் (பிளவர் கெர்ல்) பதினேழு ஆண்டுகள் கழித்து அதே தேவாலயத்தில் திருமணம் செய்துகொண்டனர்.

நம்மில் பலருக்கு முதல் காதலே கைகூடுவதில்லை! ஆனால், ஐந்து வயதில் அட்ரியன் பிராங்க்ளின், தனது உறவினரின் திருமணத்தில் அவருடன் ஜோடியாக நடைபோட்ட சிறுமியான ப்ரூக் கிப்சனை பதினேழு ஆண்டுகளுக்குப் பின்னர் அதே தேவாலயத்தில் திருமணம் செய்துகொண்டது, காதலின் மீது ஒரு நம்பிக்கையை ஏற்படுத்துகின்றது.

சிறு வயதில் அட்ரியன், ப்ரூக்குடன் பழக விரும்பவே இல்லை. ஆனால், ப்ரூக்குக்கு ‘பார்த்த நாள் முதல் அட்ரியன் மீது ஒரு இனம்புரியாத ஆசை இருந்து வந்தது. இளம்பருவத்தில் அட்ரியனுக்கும் அந்த ஆசை ப்ரூக்கின் மீது உருவாகத் தொடங்கியது.

இந்நிலையில், கடந்த ஆண்டு ப்ரூக்கிடம் ‘என்னைத் திருமணம் செய்துகொள்ளச் சம்மதமா?’ எனக் கேட்ட ஏட்ரியனுக்கு உடனடியாக சம்மதம் என்கிற பதிலைத் தந்தார் ப்ரூக். பிறகென்ன, இனிதே பொம்மைக் கல்யாண ஜோடி நிஜ ஜோடியாகிவிட்டது.