எரிபொருளுக்காக புதிய பொறி­மு­றை­யொன்று மார்ச் மாதத்தில் அறிமுகப்படுத்தப்படும்!!

263

petrol

எரி­பொ­ரு­ளுக்­கா­க புதிய பொறி­மு­றை­யொன்று, அடுத்த வருடம் மார்ச் மாதத்தில் அறி­மு­கப்­ப­டுத்­தப்­ப­டு­மென, பெற்­றோ­லிய வளத்­துறை அமைச்சர் சந்­திம வீரக்­கொடி தெரி­வித்­துள்ளார். இவ்­வ­ருடம் மே மாதம் 30ஆம் திக­தி­வரை அரச நிறு­வ­னங்கள் பெற்­றோ­லியக் கூட்­டுத்­தா­ப­னத்­துக்குச் செலுத்த வேண்­டிய மொத்தக்கடன் 30,399 பில்­லியன் ரூபா­வாக காணப்ப­டு­கின்­றது.

அவற்றில் களனி திஸ்ஸ மின் நிலையம் 1,650 மில்­லியன் ரூபா­வையும், சப்­பு­கஸ்­கந்த சுத்­தி­க­ரிப்பு நிலையம் 1,180 மில்­லியன் ரூபா­வையும், இலங்கை மின்­சா­ர­சபை 1.8 பில்­லியன் ரூபா­வையும், சுன்­னாகம் வடக்கு மின்­நி­லையம் 648 மில்­லியன் ரூபா­வையும், லக்­வி­ஜய மின்­நி­லையம் 280 மில்­லியன் ரூபா­வையும் கட­னாக வைத்­துள்­ளன.

அத்­துடன், கடந்த மே மாதம் 30ஆம் திக­தி­யுடன், இலங்கை பெற்­றோ­லிய கூட்­டுத்­தா­ப­னத்­துக்­கான மின்­நி­லை­யங்­களின் மொத்தக் கடன் தொகை 477.57 பில்­லியன் ரூபா­வாக காணப்­ப­டு­கின்­றது.

மேலும், பெற்­றோ­லிய கூட்­டுத்­தா­பனம் இலங்கை வங்­கிக்கு 195.70 பில்­லியன் ரூபா­வையும், மக்கள் வங்­கிக்கு 203.61 பில்­லியன் ரூபா­வையும், தேசிய ஈரான் எண்ணெய்க் கூட்­டுத்­தா­ப­னத்­திற்கு 34.36 பில்­லியன் ரூபா­வையும் கட­னாகச் செலுத்த வேண்­டி­யுள்­ளமை குறிப்­பி­டத்­தக்­கது.

இந்­நி­லையில், குறித்த கடனை செலுத்­து­வ­தற்கு புதிய விலைப் பொறிமுறையொன்றை அமுல்படுத்துவது அவசியமாவதால் எதிர்வரும் மார்ச் மாதத்தில் குறித்தவாறு புதிய விலைப்பொறிமுறை அமுல்படுத்தப்படும் என்­றார்.