நாட்டை கட்டியெழுப்ப முடியாவிடால் எனது பதவியை தூக்கி எறிவேன் : பிரதமர்!!

1077

1 (28)

அதி­கா­ரத்தை பயன்­ப­டுத்தி நாட்டை கட்­டி­யெ­ழுப்ப முடி­யா­விட்டால் எனது பத­வியை தூக்­கி­யெ­றிந்து வெளி­யேறத் தயார். அதை­வி­டுத்து நாட்டின் எதிர்­கா­லத்தை ஆபத்தின் பொறிக்குள் தள்­ளி­விட்டு அதி­கா­ரத்தை பாது­காத்துக் கொள்ளும் எண்ணம் எனக்கு கிடை­யாது என நேற்று பாரா­ளு­மன்­றத்தில் பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க தெரி­வித்தார்.

தொழிற்­சங்­கங்­க­ளு­ட­னான பேச்­சு­வார்த்­தை­களின் போது சாத­க­மான தீர்­வு­களை நாம் வழங்­கி­யுள்ளோம். எனவே உழைக்கும் வர்க்­கத்­தினர் நாட்டை கட்­டி­யெ­ழுப்ப எம்­மோடு ஒன்­றி­ணைய வேண்­டு­மென்றும் பிர­தமர் அழைப்பு விடுத்தார்.

பாரா­ளு­மன்­றத்தில் நேற்று திங்­கட்­கி­ழமை தொழிற்­சங்­கங்­க­ளு­ட­னான பேச்­சு­வார்த்­தைகள் தொடர்பில் விசேட கூற்று ஒன்றை முன்­வைத்து உரை­யாற்­று­கை­யி­லேயே போதே பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க மேற்­கண்­ட­வாறு குறிப்­பிட்டார்.

பிர­தமர் சபையில் தொடர்ந்து உரை­யாற்­று­கையில்,

தேசிய தொழிற்­சங்க முன்­ன­ணியின் சமன் ரத்னப் பிரிய உட்­பட பஸ் உரி­மை­யாளர் சங்­கத்தின் கெமுனு விஜே­ரத்ன ஆகி­யோரின் வேண்­டு­கோ­ளுக்­கி­ணங்க சனிக்­கி­ழமை பேச்­சு­வார்த்­தைகள் நடத்­தப்­பட்­டன.இப்­பேச்­சுக்­களின் விப­ரங்கள் ஜனா­தி­ப­திக்கும் அறி­விக்­கப்­பட்­டன. நாட்டின் எதிர்­கா­லத்தை பாது­காத்து எதிர்­கால சந்­த­தி­யி­னரின் பாது­காப்பை உறு­திப்­ப­டுத்­து­வதே எமது நோக்­க­மாகும். ஜன­வரி 8 புரட்­சியும் இதற்கே ஏற்­ப­டுத்­தப்­பட்­டது.

மக்­க­ளுக்கு சேவை செய்­வ­தற்கே நாம் ஆட்­சிக்கு வந்தோம். இத­னையே மக்கள் எம்­மி­ட­மி­ருந்து எதிர்­பார்க்­கின்­றனர். நாடு தொடர்பில் தீர்­மா­னங்­களை எடுக்கும் போது முத­லா­வது இரண்­டா­வது மூன்­றா­வது அனைத்து சந்­தர்ப்­பங்­க­ளிலும் நாட்டை பற்­றியே சிந்­திப்போம்.ஐக்­கிய தேசிய கட்­சியும் ஸ்ரீலங்கா சுதந்­திரக் கட்­சியும் இணைந்து நாட்டின் எதிர்­கா­லத்தை கரு­தியே ஆட்­சியை உரு­வாக்­கினோம். நாட்டின் முக்­கிய பிரச்­சி­னை­க­ளுக்கு தீர்வை பெற்றுக் கொடுத்து நாட்டை கட்­டி­யெ­ழுப்­பு­வ­தற்­காக இதனை செய்தோம்.

எனது அர­சியல் வாழ்க்­கையில் அதி­கா­ரத்தில் இருந்­துள்ளேன். அதி­காரம் இல்­லாமல் எதிர்க்­கட்­சி­யிலும் இருந்­துள்ளேன். நான் நாட்டை கட்­டி­யெ­ழுப்­பு­வ­தற்­கா­கவே அதி­கா­ரத்தை பயன்­ப­டுத்­தினேன். தனிப்­பட்ட நிகழ்ச்சி நிரலை முன்­னெ­டுப்­ப­தற்­காக அல்ல.அதி­கா­ரத்தை பயன்­ப­டுத்தி நாட்டை கட்­டி­யெ­ழுப்ப முடி­யா­விட்டால் அதி­கா­ரத்தை தூக்­கி­யெ­றிந்­து­விட்டு வெளி­யேறத் தயார்.

நாட்டை பொறிக்குள் தள்­ளி­விட்டு மற்றும் நாட்டின் எதிர்­கா­லத்தை ஆபத்தில் தள்­ளி­விட்டு அதி­கா­ரத்தை பாது­காத்துக் கொள்ளும் கொள்கை எனக்கு கிடை­யாது.எனவே அதி­கா­ரத்தை பாது­காத்துக் கொள்­வ­தற்­காக பிர­பல்­ய­மான தீர்­மா­னங்­களை மட்டும் மேற்­கொள்­வ­தற்­காக நாம் நட­வ­டிக்­கை­களை எடுக்க மாட்டோம். எனவே வருடா வருடம் ஓய்­வூ­தியம் செலுத்­து­வ­தற்­காக வரவு செலவுத் திட்­டத்தில் அதிக நிதி ஒதுக்­கப்­பட வேண்­டி­யுள்­ளது. அரச ஊழி­யர்­க­ளையும் அவர்­க­ளது ஓய்­வூ­தி­யத்­தையும் நாம் பாது­காப்போம். ராஜபக் ஷ ஆட்­சிக்­கா­லத்தில் அர­சியல் பிர­பல்­யத்­திற்­காக எது­வி­த­மான அடித்­த­ள­மு­மில்­லாது அரச சேவைக்கு ஆட்கள் இணைத்துக் கொள்­ளப்­பட்­டனர். ஆனால் அவர்­க­ளுக்­கான ஓய்­வூ­தி­யத்­திற்­கான ஒதுக்கம் இருக்­க­வில்லை.

இவ்­வாறு அரச ஊழி­யர்­களின் எதிர்­கா­லத்­துடன் கடந்த ஆட்­சி­யா­ளர்கள் விளை­யா­டி­யுள்­ளனர். எமது நல்­லாட்­சியில் அரச ஊழி­யர்­களின் எதிர்­கா­லத்தை பலிக்­க­டா­வாக்கி அர­சியல் இலா­பங்­களை தேட­மாட்டோம்.நாட்டு மக்­களின் எதிர்­கா­லத்தை அடகு வைத்து பிர­பல்­யத்­துக்­காக அர­சியல் செய்­ய­மாட்டோம். நாம் மேலும் பல தசாப்­தங்­களை இலக்கு வைத்தே திட்­டங்­களை முன்­னெ­டுக்­கின்றோம்.

நாட்டின் எதிர்­காலம் கருதி பிர­பல்யம் இல்­லாத தீர்­மா­னங்­களை எடுப்­பதில் நாம் பின்­னிற்க மாட்டோம். நாம் எடுக்கும் சில தீர்­மா­னங்கள் நிகழ்­கா­லத்தில் பிர­பல்­ய­மில்­லா­த­வை­யாக இருக்­கலாம். விமர்­ச­னங்­க­ளுக்கு உள்­ளா­கலாம். ஆனால் எதிர்­கா­லத்தில் எப்­போ­தா­வது ஒரு தினத்தில் நாம் எடுத்த தீர்­மானம் சரி­யா­ன­தென்­பதை எதிர்­கால சந்­த­தி­யினர் சொல்­வார்கள்.

ஊழியர் சேம­லாப நிதி, ஊழியர் நம்­பிக்கை நிதியம் தொடர்­பா­கவும் பேசினோம். இந்­நி­தி­யங்­களை முழு­மை­யாக பாது­காப்போம். எவ­ருக்கும் கொள்­ளை­ய­டிக்க இட­ம­ளிக்­க­மாட்டோம். அதற்­கேற்ற விதத்தில் நிர்­வாகத் திட்­ட­மொன்றை ஏற்­ப­டுத்­துவோம். ஆனால் இது தொடர்பில் தொழிற்­சங்­கங்­க­ளுடன் பேசியே இறுதி முடிவு எடுப்போம்.

வயது முதிர்ந்­தோர்­களின் எண்­ணிக்கை அதி­க­ரிப்பு, வாழும் வய­தெல்லை அதி­க­ரிப்பு என்­ப­ன­வற்றால் ஓய்­வூ­திய கொடுப்­ப­னவை வழங்­கு­வது மேலும் நெருக்­க­டி­யாகும்.தற்­போ­தைய ஓய்­வூ­தியத் திட்­டத்தில் எது­வி­த­மான மாற்­றமும் மேற்­கொள்­ளப்­பட மாட்­டாது. அபி­வி­ருத்தி வீதத்தை 8,9 வீதங்­க­ளாக அதி­க­ரிப்­ப­தற்கு முயற்­சி­களை எடுக்க வேண்டும். இதன்­போது தான் அரச ஊழி­யர்­களின் ஓய்­வூ­திய வாழ்க்­கையை பாது­காக்க முடியும்.

தொழிற் சங்­கங்கள் மற்றும் வங்கி ஊழியர் சங்கம் முன்­வைத்த யோச­னை­களை ஏற்­றுக்­கொண்டோம். அரச ஊழி­யர்­களின் அடிப்­படை சம்­ப­ளத்­துடன் ரூபா 2000 அடுத்த வருடம் இணைக்­கப்­படும். இது படிப்­ப­டி­யாக 3 கட்­டங்­க­ளாக முன்­னெ­டுக்­கப்­படும்.அரச ஊழி­யர்­களின் சம்­பள முரண்­பா­டு­களை நீக்க நட­வ­டிக்­கைகள் எடுக்­கப்­படும். இது தொடர்­பான அறிக்கை தயா­ரிக்கும் பொறுப்பு தேசிய சம்­பள ஆணைக்­கு­ழு­விடம் கைய­ளிக்­கப்­படும். 6 மாதங்கள் இதற்­காக அவ­காசம் வழங்­கப்­படும்.2016 ஆம் ஆண்டு ஜன­வரி தொடக்கம் ஓய்வு பெறும் அனை­வ­ருக்கும் “அக்­ர­ஹார” காப்­பு­றுதி கொடுப்­ப­னவு வழங்­கப்­படும்.

இது­வ­ரையில் ஸ்ரீலங்கா ரெலிகொம், தொலைத்­தொ­டர்­புகள் அமைச்சின் “மம­னி­த­வள ஊழி­யர்கள்” நிரந்­தர சேவைக்கு இணைத்துக் கொள்­ளப்­ப­டாமல் உள்­ளனர். இது தொடர்­பாக கவனம் செலுத்­தப்­படும்.வாகன புகைப்­ப­ரி­சோ­தனை கட்­டணம், லீசிங் தொடர்­பான மதிப்­பீட்டு கட்­டணம் மற்றும் வரு­மான அனு­ம­திப்­பத்­திரம் தொடர்­பா­கவும் தொழிற்­சங்­கங்­க­ளுடன் கலந்­து­ரை­யா­டப்­பட்­டது.

இவை தொடர்பில் மீளாய்வு செய்­வ­தற்கு நாம் தயா­ரா­க­வுள்ளோம். இது தொடர்பில் சம்­பந்­தப்­பட்­ட­வர்­க­ளுடன் பேச்­சு­வார்த்தை நடத்தி இறுதித் தீர்வை பெற்றுக் கொள்­ளும்­வரை இடைக்­கால தீர்­வுகள் சில­வற்றை மேற்­கொண்டோம்.இவற்­றுக்­க­மைய வரு­மான அனு­மதிப் பத்­திரக் கட்­டண அதி­க­ரிப்பு 25 வீதத்­தி­லி­ருந்து 15 வீத­மாக குறைக்­கப்­படும்.

வாகன புகைப்­ப­ரி­சோ­தனை கட்­டணம் ரூபா 1500 வாக இடைக்­கால கட்­ட­ண­மாக அற­வி­டப்­படும். லீசிங் வாக­னத்­திற்­கான மதிப்­பீட்டுக் கட்­டணம் ரூபா 5000 ஆகவும் முச்­சக்­க­ர­வண்­டிகள், மோட்டார் சைக்­கிள்­க­ளுக்­கான மதிப்­பீட்டுக் கட்ணம் ரூபா 3000 ஆக குறைக்­கப்­படும்.

வங்­கி­களில் அடகு எடுக்கும் வரை­ய­றைகள் மற்றும் லீசிங் நட­வ­டிக்­கை­க­ளி­லி­ருந்து வங்­கி­களை வெளி­யேற்­றுதல் தொடர்பில் வங்கித் தலை­வர்­க­ளுடன் பேச்­சு­வார்த்­தைகள் நடத்தி பொது­வான யோச­னை­யொன்றை முன்­னெ­டுக்­கு­மாறு கோரப்­பட்­டுள்­ளது.வங்­கி­களின் வரு­மானம் வீழ்ச்சி காணும் விதத்தில் எது­வி­த­மான தீர்­மா­னமும் எடுக்­கப்­ப­ட­மாட்­டாது.

அத்­தோடு வங்­கி­களில் ரூபா 10 இலட்சம் மீளப் பெறும் போது நூற்­றுக்கு 2 வீதம் வரி அற­வி­டு­வது தொடர்பில் மத்­திய வங்­கி­யிடம் அறிக்கை கோரப்­பட்­டுள்­ளது. இதற்­க­மைய திருத்­தங்­களை மேற்­கொள்ளத் தயா­ராக இருக்­கின்றோம்.

தனியார் துறை ஊழி­யர்­க­ளுக்கு ரூபா 2500 சம்­பள உயர்வு வழங்­கு­வ­தற்­கான சட்ட நட­வ­டிக்­கைகள் மற்றும் 5 நாள் சேவை தொடர்­பிலும் தொழிற்­சங்­கங்­க­ளுடன் பேசப்­பட்­டது.8 மணித்­தி­யால வேலை நேரத்தை மாற்றும் எண்ணம் கிடை­யாது. மலை­யக தோட்டத் தொழி­லா­ளர்­களின் சம்­பள உயர்வு தொடர்­பிலும் கவனம் செலுத்­தப்­ப­டு­கி­றது.

அரச மற்றும் தனியார் துறை­யி­ன­ருக்கு வாழ்க்கை செல­வுக்கு ஏற்ற சம்­ப­ளத்தை வழங்க அடுத்த வருடம் முதல் நட­வ­டிக்கை எடுக்­கப்­படும்.ஐக்­கிய தேசிய கட்சி மற்றும் ஸ்ரீலங்கா சுதந்­திரக் கட்­சி­களின் தொழிற்­சங்­கங்­க­ளு­டனும் பேச்­சு­வார்த்­தைகள் நடத்­தப்­படும். பேச்­சு­வார்த்­தைகள் மூலம் இணக்­கப்­பாட்டை ஏற்­ப­டுத்திக் கொள்ள தொழிற்­சங்­கங்கள் மேற்­கொண்ட முயற்­சி­களை பாராட்­டு­கின்றேன்.

எனவே சம்­பி­ர­தா­ய­பூர்­வ­மாக அனைத்­தையும் சிந்­திக்­காது அர்ப்­ப­ணிப்­புடன் எதிர்­வரும் வரு­டங்­களில் தேவை­யான கொள்­கை­களை தீர்­மா­னிப்போம். அதற்­க­மைய செயல்­ப­டுவோம். எந்­நே­ரமும் சிந்­தித்து செயற்­ப­டு­மாறு அரச, தனி­யார்­துறை ஊழி­யர்­களை நாம் கேட்டுக் கொள்­கிறோம். ஜன­வரி 8 புரட்சி பட்­டது.

8 மணித்­தி­யால வேலை நேரத்தை மாற்றும் எண்ணம் கிடை­யாது. மலை­யக தோட்டத் தொழிலாளர்களின் சம்பள உயர்வு தொடர்பிலும் கவனம் செலுத்தப்படுகிறது.அரச மற்றும் தனியார் துறையினருக்கு வாழ்க்கை செலவுக்கு ஏற்ற சம்பளத்தை வழங்க அடுத்த வருடம் முதல் நடவடிக்கை எடுக்கப்படும்.

ஐக்­கிய தேசிய கட்சி மற்றும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிகளின் தொழிற்சங்கங்களுடனும் பேச்சுவார்த்தைகள் நடத்தப்படும். பேச்சுவார்த்தைகள் மூலம் இணக்கப்பாட்டை ஏற்படுத்திக் கொள்ள தொழிற்சங்கங்கள் மேற்கொண்ட முயற்சிகளை பாராட்டுகின்றேன்.

எனவே சம்பிரதாயபூர்வமாக அனைத்தையும் சிந்திக்காது அர்ப்பணிப்புடன் எதிர்வரும் வருடங்களில் தேவையான கொள்கைகளை தீர்மானிப்போம். அதற்கமைய செயல்படுவோம். எந்நேரமும் சிந்தித்து செயற்படுமாறு அரச, தனியார்துறை ஊழியர்களை நாம் கேட்டுக் கொள்கிறோம். ஜனவரி 8 புரட்சி மீள பின்னடைவு காண்பதற்கு இடமளிக்காது நாட்டு மக்களை நினைத்து தீர்மானம் எடுப்போம் என்றார்.