கிளிநொச்சியில் சாதாரண தரப் பரீட்சையில் ஆள்மாராட்டம் – ஒருவர் கைது!!

487

1 (8)

கல்விப் பொதுத்தராதர சாதாரணதரப் பரீட்சைகளில் ஆள்மாராட்டம் செய்த ஒருவர் பூநகரி பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டுள்ளார்.நேற்று இடம்பெற்ற கணித பாடத்திற்கு பரிட்சார்த்திக்கு பதிலாக சந்தேகநபர் பரீட்சை மத்திய நிலையத்திற்கு வந்திருந்ததாக தெரியவந்துள்ளது.

இது தொடர்பில் கண்காணிப்பாளரினால் பூநகரி பொலிஸாருக்கு தெரியப்படுத்தப்பட்டதை அடுத்து இவர் கைதாகியுள்ளார். மேலும் இவர் கிளிநொச்சி பகுதியைச் சேர்ந்த 22 வயதான ஒருவராவார்.இவரை கிளிநொச்சி நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.