Facebook அலுவலகம் மீது தாக்குதல்!!

289

சமூக வலைத்தளமான பேஸ்புக்கின் தலைமை அலுவலகம் மீது மர்ம நபர்கள் சிலர் புகை குண்டுகள் மற்றும் கற்களை வீசி கொடூரமாக தாக்கியுள்ள சம்பவம் பொலிசாரை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

ஜேர்மனியில் உள்ள பேஸ்புக் கிளை தலைமை அலுவலகத்தில் தான் இந்த அடாவடி சம்பவம் நிகழ்ந்துள்ளது.

ஹேம்பர்க் நகரில் இயங்கி வரும் அந்த அலுவலகத்திற்கு நேற்று நள்ளிரவில் 20 பேர் அடங்கிய முகமூடி அணிந்த மர்ம நபர்கள் வந்துள்ளதாக தெரிகிறது.

ஒன்றாக திரண்டிருந்த அந்த கும்பல் அலுவலகம் மீது புகை குண்டுகள் மற்றும் கற்களை வீசி கடுமையாக தாக்கியுள்ளனர்.

பின்னர், அலுவலகத்தின் சுவர் மீது ‘Facebook Dislike’(பேஸ்புக்கை வெறுக்கிறோம்) என எழுதிவிட்டு அங்கிருந்து தப்பியுள்ளனர்.

இந்த சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்திவரும் பொலிசார், ‘பேஸ்புக் மூலமாக இனவெறியை தூண்டும் விதமாக கருத்து வெளியிடபடுவதை தடுக்க தவறிய காரணத்திற்காக இந்த தாக்குதலை நடத்தி இருக்கலாம்’ என தெரிவித்துள்ளனர்.

இது குறித்து ஜேர்மன் அரசியல் விமர்சகர்கள் கருத்து கூறுகையில், பேஸ்புக்கில் வெளியிடப்படும் ஆபாசப்படங்கள் மற்றும் பாலியல் ரீதியான கருத்துக்களுக்கு எதிராக பேஸ்புக் நிறுவனம் நடவடிக்கை எடுத்து வருகிறது.

ஆனால், இனவெறியை தூண்டும் விதமாக எந்த நடவடிக்கையும் எடுக்க தயங்கி வருவதால் இதுபோன்ற அசம்பாவிதங்கள் நடைப்பெறுவதாக கருத்து தெரிவித்துள்ளனர்.

ஜேர்மனியின் சட்ட அமைச்சரான Heiko Maas, ‘இனவெறியை தூண்டும் விதமாக கருத்துக்களை பரப்பி வருவபவர்களுக்கு பேஸ்புக் பலியாக கூடாது’ என ஏற்கனவே எச்சரிக்கை விடுத்திருந்தார்.

பேஸ்புக்கில் கட்டுப்பாடுகள் விதிப்பது தொடர்பாக அரசுடன் ஆலோசனை நடத்த தயார் என அந்நிறுவன அதிகாரிகள் ஏற்கனவே கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.

பேஸ்புக்கின் ஜேர்மன் கிளை தலைமை அலுவலகத்தை தாக்கிய மர்ம நபர்களை பொலிசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

Facebook Facebook1