பெண் சுற்றுலாப்பயணி மீது விடுதியில் மசாஜ் செய்பவர் வல்லுறவு!!

499

1 (65)

அவுஸ்திரேலியாவை சேர்ந்த 26 வயதுடைய பெண் சுற்றுலாப் பயணியை பாலியல் வல்லுறவிற்குட்படுத்த முயன்ற, விடுதியில் மசாஜ் செய்யும் நபர் எல்ல பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார்.

இச் சம்பவம், எல்ல பகுதியிலுள்ள மசாஜ் செய்யும் மத்திய நிலையத்தில் இடம்பெற்றுள்ளது. எல்ல பகுதியில் சுற்றுலாவில் ஈடுபட்டிருந்த அவுஸ்திரேலிய நாட்டுப் பிரஜையான இளம்பெண், மேற்படி மசாஜ் செய்யும் மத்திய நிலையத்திற்கு சென்றுள்ளார்.

அங்கு, மசாஜ் செய்யும் நபர், குறித்த இளம் பெண்ணை பாலியல் வல்லுறவிற்குட்படுத்த முயன்றுள்ளார். இந்நிலையில், இது குறித்து அப்பெண், எல்ல பொலிஸ் நிலையத்தில் முறையிடவே, எல்ல பொலிஸார் குறித்த நபரைக் கைது செய்துள்ளனர்.

கைது செய்யப்பட்ட நபரை விசாரணைகளின் பின்னர், பண்டாரவளை மஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த எல்ல பொலிஸார் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.