
இலங்கை கிரிக்கெட் அணி நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து மூன்று டெஸ்ட், ஐந்து ஒருநாள் போட்டிகள் மற்றும் இரு 20க்கு இருபது போட்டிகளில் விளையாடுகின்றது.இதில் டுனிடினில் நடைபெற்ற முதல் டெஸ்ட் போட்டியில் நியூசிலாந்து 122 ஓட்டங்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
மேலும் 2–வது டெஸ்ட் எதிர்வரும் 18–ம் திகதி இடம்பெறவுள்ளது.இதை தொடர்ந்து 5 ஒரு நாள் போட்டி மற்றும் இரண்டு 20க்கு இருபது போட்டிகளும் நடைபெறவுள்ளன. இந்தநிலையில் முதல் 3 ஒருநாள் போட்டிக்கான நியூசிலாந்து அணி இன்று அறிவிக்கப்பட்டது.வேகப்பந்து வீரர் டிரென்ட் போல்ட்டுக்கு இதில் ஓய்வு கொடுக்கப்பட்டுள்ளது. இதே போல டிம் சவுத்தி 3–வது ஒரு நாள் போட்டியில் அணியில் இணைந்து கொள்வார்.
நியூசிலாந்து அணி விவரம்:–
மெக்குல்லம் (தலைவர்), பிரேஸ்வெல், குப்தில், மேட் ஹென்றி, மெக்லகள், வில்லியம்சன், டெய்லர், ஆடம்மிலின், ஹென்றி நிக்கோலஸ், ரோஞ்சி, சான்டர், சோதி, வார்க்கர்.





