தன்னைக் கடித்த பாம்பை துண்டு துண்டாக கடித்துக் கொன்ற விவசாயி!!

609

snake

இந்திய மாநிலம் போபாலில் தன்னைக் கடித்த பாம்பை திருப்பிக் கடித்து துண்டங்களாக்கிய விவசாயியை அப்பகுதி மக்கள் ஆச்சர்யமாகப் பார்க்கின்றனர்.

போபால் அருகே மச்சி போர்கான் என்ற கிராமத்தில் வசித்து வரும் 30 வயது நிலாப் துர்பே என்ற விவசாயி தனது மாடுகளை மேய்த்து விட்டு இரவு சுமார் 7 மணியளவில் வீடு திரும்பிக் கொண்டிருந்தார். அப்போது அவரை ஒரு பாம்பு கடித்து விட்டது.

தன்னைக் கடித்தப் பாம்பை திருப்பிக் கடிக்காது என முன்னோர் கூறிய அறிவுரை ஞாபகத்திற்கு வர உடனடியாக பாம்பை கையில் எடுத்து அதனை துண்டங்களாக கடித்துத் துப்பியுள்ளார் நிலாப். நிலாப்பை பாம்பு கடித்த விபரம் அறிந்த அவரது ஊர்க்காரர்கள் அவரை உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளனர்.

அவருக்கு விஷ மருந்து கொடுத்த வைத்தியர் ராகுல் இது குறித்து கூறுகையில் தான் இந்த மருத்துவமனைக்கு வந்ததிலிருந்து 200க்கும் மேற்பட்ட பழங்குடி மக்களுக்கு பாம்புக்கடிக்கு சிகிச்சை அளித்துள்ளதாகவும் ஆனால் இதுபோன்ற சம்பவம் நடைபெறுவது இதுவே முதன்முறை என்றும் அதிர்ச்சியுடன் தெரிவித்துள்ளார்.