கடல் நீர்மட்டம் உயர்வால் மெதுவாக சுழலும் பூமி

432

world_sea_001.w540

கடல் நீர்மட்டம் அதிகரித்து வருவதால் பூமி சுற்றும் வேகம் குறைந்து வருவதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். கனடாவின் அல்பெர்டா பல்கலைகழக பேராசிரியர், மேத்யூ டம்பெரி இது குறித்து கூறும்போது பூமியின் வெப்பம் அதிகரித்து வருவதால், துருவப் பகுதிகளில் உள்ள பனி மலைகள் வேகமாக உருகி கடல் நீர்மட்டம் அதிகரித்து வருவதை சுட்டிக்காட்டியுள்ளார்.

இதனால் துருவங்களின் அடர்த்தி குறைவதும், நிலவின் ஈர்ப்பு சக்தியும், பூமியை மெதுவாக சுழலச் செய்வதாக அவர் தெரிவித்துள்ளார்.இவ்வாறு பூமி மெதுவாகச் சுழல்வதால் ஒரு நாளின் நீளம் அதிகரிக்கும் என்றும் கூறியுள்ள மேத்யூ டம்பெரி அடுத்த நூற்றாண்டிற்குள், ஒரு நாள் பொழுதில், 1.7 மில்லி நொடிகள் நீளும் என்று கூறியுள்ளார்.

மேலும் பருவ நிலை மாற்றம், கடல் நீர்மட்ட உயர்வு போன்றவற்றின் தாக்கத்தை கருத்தில் கொண்டு, கடலோர நகரங்களில், அடிப்படை கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்த வேண்டும்; அதற்காக, லட்சக்கணக்கான கோடிகளை கொட்ட வேண்டும். என்றும் அவர் தெரிவித்துள்ளார்.