பள்ளத்தில் கவிழ்ந்த பஸ் – ஒருவர் பலி; 40 பேர் வைத்தியசாலையில்!!

538

1 (59)

லிந்துலை – நுவரெலியா வீதியின் விநாயகர் கோவிலுக்கு அருகில் 40 அடி பள்ளத்தில் பஸ் ஒன்று கவிழ்ந்து விபத்துக்குள்ளாகியதில் ஒருவர் உயிரிழந்துள்ளார். இன்று காலை 08.00 மணியளவில் இடம்பெற்ற இந்த சம்பவத்தில் 40 பேர் காயமடைந்துள்ளனர்.

இதன்போது காயமடைந்தவர்கள் லிந்துலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் குறிப்பிட்டுள்ளது. டி.ஆர்.ஐ தேயிலை ஆராய்ச்சி நிலையத்தில் பணியாற்றும் சேவையாளர்களே இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளனர். இதில் மூவரின் நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாகவும் எமது செய்தியார் குறிப்பிட்டார். இவ்விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை லிந்துலை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.