
அரசாங்க சேவை தொடர்பாக முறைப்பாடுகளை மேற்கொள்ளவது தொடர்பாக விஷேட பிரிவொன்றை அமைக்க உள்ளதாக பிரதமர் ரணில் விக்கிரம சிங்க தெரிவித்தார்.
சுமுகமான முறையில் மக்களுக்கு சிறந்த சேவையை வழங்குதல் தொடர்பாக கிராம சேவகர் தொகுதிகளை ஒன்றிணைத்து கிராம ராஜ்ஜிய மையங்கள் 2500 ஐ அமைக்க உள்ளதாக நேற்று கொழும்பில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்ட போது பிரதமர் தெரிவித்தார்.





