தேங்கியுள்ள நெல் வெளிநாட்டுக்கு விற்பனை !!

1439

12837096-paddy-rice-texture-Stock-Photo

சிறுபோக பயிர் செய்கையில் விவசாயிகளிடம் கொள்வனவு செய்து தேங்கியுள்ள நெல் தொகையை வெளிநாட்டு நிறுவனங்களுக்கு விற்பனை செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கிராமிய பொருளாதாரம் தொடர்பான அமைச்சர் பீ. ஹெரிசன் இதனை தெரிவித்துள்ளார். வாழ்கை செலவு குழு நேற்று நாடாளுமன்றில் ஒன்றுக் கூடியது. இதில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர் இதனை குறிப்பிட்டார்.

நெல் குறித்து உள்ளூர் வர்த்தகர்களுக்காக நிலையான கட்டணங்கள் முன்வைக்கப்பட்டுள்ளன.எனினும், அதற்கான உரிய பதில் உள்ளூர் விவசாயிகளிடம் கிடைக்க பெறவில்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.இதன்காரணமாகவே, நெல் தொகுதியை வெளிநாட்டு நிறுவனங்களுக்கு விற்பனை செய்ய தீர்மானித்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.