குளிர் தாங்காமல் மயங்கி விழுந்து உயிரிழந்த மணப்பெண்: மணமேடையில் நிகழ்ந்த சோகம்!!

1127

groom2_3371078b

பீகாரில் திருமண நாளன்று மணமகள் குளிர் தாங்காமல் மயங்கி விழுந்து உயிரிழந்துள்ளார்.பாக்தியர்பூர் பகுதியில் கடந்த 13ம் திகதி சோனி என்ற பெண்ணுக்கும், கயானந்த் குமார் என்ற இளைஞருக்கும் திருமணத்திற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில் மேடையில் இருந்த மணப்பெண் திடீரென மயக்கம் போட்டு விழுந்துள்ளார்.இதையடுத்து அவரை மருத்துவமனைக்கு கொண்டுசென்ற போது, அவரை சோதித்த மருத்துவர்கள், அதிக குளிர் காரணமாக அவர் உயிரிழந்து விட்டதாக தெரிவித்துள்ளனர்.

இதனால் இருவீட்டாரும் அதிர்ச்சியடைந்த நிலையில், மணமகன் குமார், சோனியின் உடலை தங்களது வீட்டிற்கு கொண்டு சென்று இறுதி சடங்கு செய்ய விரும்புவதாக தெரிவித்துள்ளார்.இதையடுத்து சோனி உடல், குமாரின் வீட்டிற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.

அங்கு இறுதி சடங்குகளுக்குப் பின் அவரது உடல் எரியூட்டப்பட்டுள்ளது. பின்னர் சோனியின் அஸ்தியை குமார் கங்கையில் கரைத்துள்ளார். திருமணத்திற்கு முன்பே இறந்து போன தனது மணப்பெண்ணிற்கு குமார் இறுதிச் சடங்குகளைச் செய்தது நெகிழச் செய்வதாக இருந்ததாக சோனியின் உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.