வவுனியா மாவட்டத்திலுள்ள சகல பாடசாலைகளுக்கும் மாணவர்களை ஏற்றிச் செல்லும் முச்சக்கரவண்டி மற்றும் வான் என்பனவற்றிற்கு புதிய நடைமுறை பின்பற்றுவது தொடர்பாக நேற்று முன்தினம் (15.12.2015) காலை வவுனியா பிரதேச செயலகத்தில் இடம்பெற்ற கூட்டத்தில் புதிய நடைமுறைகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாகவும் அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் முதல் நடைமுறைப்படுத்தப்படவுள்ளதாக தெரிவருகிறது.
பிரதேச செயலாளர் திரு கா.உதயராசா தலைமையில் இடம்பெற்ற இக்கூட்டத்தில் வவுனியா சுகாதார வைத்திய கலாநிதி எஸ். லவன், நகரசபை செயலாளர் திரு.எஸ்.தர்மேந்திரா மேற்பார்வை பொது சுகாதார பரிசோதகர் க.மேஜெயா, பொது சுகாதார பிரிசோதகர்கள், சிறுவர் நன்நடத்தை உத்தியோகத்தர் திரு.ஜெயகெனடி, போக்குவரத்துப் பொலிசார் மற்றும் பிரதேச செயலக உத்தியோகத்தர்கள், முச்சக்கரவண்டி சங்க உறுப்பினர்கள், முச்சக்கரவண்டி உரிமையாளர்கள், சாரதிகள், வான் சேவையில் ஈடுபடும் சாரதிகள் என பலரும் கலந்து கொண்டதுடன்,
பாடசாலை சேவையில் ஈடுபடும் சகல முச்சக்கரவண்டி மற்றும் வாகனங்களும் பதிவு செய்யப்படவேண்டும், அத்துடன் நிர்வாக ஒழுங்கமைப்பு மேற்கொள்ளத்திட்டங்கள் வகுக்கப்பட்டது.
இதில் பொது சுகாதார பரிசோதகர்களின் பங்களிப்பு சிறுவர் நன்நனடத்தை உத்தியோகத்தர்களின் பங்களிப்பு குறிப்பாக துஸ்பிரயோகம் இடம்பெறாவண்ணம் பாதுகாப்பது தொடர்பாகவும், போக்குவரத்து நடைமுறைகள் தொடர்பாக போக்குவரத்து பொலிசாரிடம் ஆராயப்பட்டதுடன் முச்சக்கரவண்டியில் அதிகளவான மாணவர்களை ஏற்றாது குறிப்பிடத்தக்க மாணவர்களை ஏற்றிச்செல்வது உட்பட பாடசாலை மாணவர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் தொடர்பாகவும் ஆராயப்பட்டதுடன் இந்நடைமுறை அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் முதல் நடைமுறைப்படுத்த முடிவுசெய்யப்பட்டுள்ளதாக தெரிவித்தனர்.






