வவுனியாவில் புகழ்பெற்ற எழுத்தாளர் கலையரசன் அவர்களின் சிறப்பு சொற்பொழிவு!!

579

Kalayarasan

வவுனியா தமிழ் மாமன்றத்தின் ஏற்பாட்டில், இலங்கைக்கு வருகை தந்திருக்கும் புலம்பெயர் எழுத்தாளரும் இடதுசாரி சிந்தனையாளருமான த.கலையரசன் அவர்களின் சிறப்பு சொற்பொழிவு மற்றும் கலந்துரையாடல் நிகழ்வு, எதிர்வரும் 20.12.2015 ஞாயிற்றுக்கிழமை, காலை 10 மணிக்கு, வவுனியா சுந்தானந்த இந்து இளைஞர் சங்க மண்டபத்தில் இடம் பெறவிருக்கின்றது.

‘ஈராக் வரலாறும் அரசியலும்’, இலங்கை தமிழ் அகதிகள் குறித்து முழுமையான அரசியல் ஆவணமாக வெளிவந்த ‘அகதி வாழ்க்கை, ‘ஆபிரிக்கர்கள் கண்டுபிடித்த இருண்ட ஐரோப்பா’, ‘ஈழத் தமிழர்களை யூதர்களுடன் ஒப்பிட முடியுமா?’, ‘காசு ஒரு பிசாசு’ என்கின்ற நூல்களின் ஆசிரியர்களான இவர், ஒர் சர்வதேச அரசியல் பொருளாதார அறிஞர் ஆவர்.

எழுத்துலகில், தன் ஆழ்ந்த எழுத்துக்களால் இடம் பிடித்த கலையரசன் அவர்கள், இலங்கை வருகையை தொடர்ந்து, பல்வேறு இடங்களில் அவருடனான கலந்துரையாடல் நிகழ்வுகள் இடம் பெற்றுக்கொண்டிருக்கின்ற நிலையில், வவுனியாவில், அவருடைய சிறப்பு சொற்பொழிவு இடம்பெற இருக்கின்றமை குறிப்பிடத்தக்க விடயம்.

கலையரசன் அவர்களை சந்தித்து கலந்துரையாட ஆர்வமுள்ள அனைவரும், எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை வவுனியாயாவில் இடம் பெறவிருக்கின்ற நிகழ்விற்கு வருகை தருவதன் மூலம், அவருடைய சொற்பொழிவை கேட்கும் வாய்ப்பையும், அவருடன் கலந்துரையாடுகின்ற வாய்ப்பினையும் பெற்றுக்கொள்ள முடியும்.