காட்டுக்குள் பலவந்தமாக அழைத்துச் செல்லப்பட்ட பாடசாலை மாணவி துஷ்பிரயோகம்!!

509

16332744660xnfdj67

பாடசாலை மாணவியொருவரை துஷ்பிரயோகம் செய்த நபரொருவர் திருகோணமலை நீதவான் நீதிமன்றத்தால் எதிர்வரும் 22 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.15 வயதுச் சிறு­மியை துஷ்­பி­ர­யோ­கத்­திற்குட்­ப­டுத்­தி­ய­தாகக் கூறப்­படும் பாட­சாலை காவ­லாளி ஒரு­வரே இவ்வாறு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

குறித்த சந்தேகநபர் காவ­லா­ளி­யாக இருக்கும் அதே பாட­சா­லையில் 9 ஆம் தரத்தில் கல்வி பயின்று வரும் சிறு­மியை ­க­டந்த திங்கட்கி­ழமை பல­வந்­த­மாக மோட்டார் சைக்­கிளில் ஏற்­றிச்­சென்று காட்­டுப்­ப­குதி ஒன்றுக்குள் அழைத்துச் சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதனை அவதானித்த கிராம மக்கள் குறித்த நபரை பிடித்து பொலி­ஸா­ரிடம் ஒப்­ப­டைத்­துள்­ளனர்.இத­னை­ய­டுத்து குச்­ச­வெளி பொலிஸார் அவரை திரு­கோ­ண­மலை நீதி­மன்றில் ஆஜர்­ப­டுத்­தி­ய­போதே நீதிவான் அவரை விளக்கமறியலில் வைக்­கு­மாறு உத்­த­ர­விட்டுள்ளார்.சிறுமி வைத்திய பரிசோதனைக்காக திருகோணமலை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.