
துணை விமானியின் கவனக் குறைவால் மும்பையில் ஏர் இந்தியா விமான என்ஜினில் சிக்கி ஊழியர் ஒருவர் பலியாகியுள்ளார். நேற்று இரவு சுமார் 8.40 மணியளவில் மும்பையிலிருந்து ஐதராபாத் நோக்கி செல்ல ஏர் இந்தியா விமான நிறுவனத்தின் விமானம் ஒன்று தயாராக இருந்தது.
இந்நிலையில் விமான தொழில்நுட்ப ஊழியர் ஒருவர் விமான என்ஜின் அருகே பராமரிப்பு பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது தனக்கு அளிக்கப்பட்ட சைகையை தவறாக புரிந்துகொண்ட துணை விமானி விமானத்தின் என்ஜினை இயக்கியதால் என்ஜின் அருகே வேலைப் பார்த்துக்கொண்டிருந்த ஊழியர் கண்ணிமைக்கும் நேரத்தில் விமானத்தின் என்ஜின் உள்ளே இழுக்கப்பட்டு பலியானார். இந்த சம்பவம் பற்றி விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.





