சுதா ரகுநாதனுக்கு சங்கீத கலாநிதி விருது!!

320

sutha rahunathan

சுதா ரகுநாதனுக்கு சங்கீத கலாநிதி விருது மியூசிக் அக்கடமியின் செயற்குழு கூட்டம் நேற்று நடைபெற்றது. இதில் இந்த ஆண்டுக்கான, அக்கடமியின் சங்கீத கலாநிதி விருதுக்கு பிரபல பாடகி சுதா ரகுநாதன் பெயர் ஏகமனதாக தேர்வு செய்யப்பட்டது.

அத்துடன் இந்த ஆண்டு டிசம்பர் மாதம் 15ம் திகதி தொடங்கவுள்ள அக்கடமியின் 87வது இசைவிழா மற்றும் கருத்தரங்கை தலைமையேற்று நடத்தவும் அவர் தேர்வு செய்யப்பட்டுள்ளார். அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் 1ம் திகதி நடைபெறவுள்ள இசைவிழா (சதஸ்) நிறைவு விழாவில் சுதா ரகுநாதனுக்கு சங்கீத கலாநிதி விருது வழங்கப்படுகிறது.

மேலும் இந்த விழாவில் அகாடமியின் சார்பிலான சங்கீத கலா ஆச்சார்யா விருது பாடகர்கள் டி.பசுபதி, கல்யாணி சர்மா ஆகியோருக்கும், டி.டி.கே.விருது புல்லாங்குழல் கலைஞர் டாக்டர் பிரபஞ்சம் சீதாராமன், மிருதங்க கலைஞர் தஞ்சாவூர் ராமமூர்த்தி ஆகியோருக்கும் வழங்கப்படுகிறது.

இசை ஆராய்ச்சியாளர் விருது டாக்டர் ஆர்.எஸ்.ஜெயலட்சுமிக்கும், வயலின் இசைக்கலைஞருக்கான பப்பு வெங்கடராமையா விருது எச்.கே.நரசிம்மமூர்த்திக்கு வழங்கப்படுகிறது.

இந்த ஆண்டுக்கான நாட்டிய கலா ஆச்சார்யா விருது பிரபல பரதநாட்டிய கலைஞர் சித்ரா விஸ்வேஸ்வரனுக்கு ஜனவரி மாதம் 3ம் திகதி நடைபெறவுள்ள நாட்டிய விழாவில் வழங்கப்படும்.

மேற்கண்ட தகவலை மியூசிக் அக்கடமியின் தலைவர் என்.ரவி அறிக்கை ஒன்றில் தெரிவித்து உள்ளார்.