
அக்கரைப்பற்று கண்ணகிபுரம் பிரதேசத்தில் 10 வயது சிறுமியை பாலியல் துஷ்பிரயோகம் செய்த இளைஞனை 14 நாட்கள் விளக்கமறியலில் வைக்குமாறு அக்கரைப்பற்று நீதிவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இதுபற்றி தெரியவருவதாவது:
குறித்த சிறுமி தனது வீட்டின் முற்றத்தில் விளையாடிக் கொண்டிருந்தபோது பக்கத்து வீட்டைச் சேர்ந்த நபர் சிறுமியை கடைக்குச் சென்று கைத்தொலைபேசிக்கான மீள்நிரப்பு அட்டையொன்றை வாங்கிவருமாறு பணத்தைக் கொடுத்துள்ளார். இதனையடுத்து சிறுமி கடைக்கு சென்று மீள்நிரப்பும் அட்டையை வாங்கிக் கொண்டு பக்கத்து வீட்டிற்கு உரியவரிடம் கொடுக்கச் சென்றபோது சிறுமியை பாலியல் துஷ்பிரயோகம் செய்துள்ளார்.
இதையடுத்து பெற்றோர் பொலிஸாரிடம் முறைப்பாடு செய்த நிலையில் குறித்த இளைஞரை கைது செய்துள்ளதுடன் பாதிக்கப்பட்ட சிறுமி அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.





