
மக்களின் பிரச்சினைகளை ஒரே தடவையில் தீர்க்கும் அரசாங்கம், உலகில் இல்லை ஜனாதிபதி மைத்திரிபால தெரிவித்துள்ளார்.பத்தரமுல்லையில் நேற்று இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்ட போதே ஜனாதிபதி இவ்வாறு குறிப்பிட்டார்.
மின்சார சபையில் 2 ஆயிரத்து 344 பேருக்குக்கு நிறந்தர நியமனங்களை வழங்கும் நிகழ்வு பத்தரமுல்லையில் இடம்பெற்றது.இதன்போது உரையாற்றிய அவர், நாட்டு மக்களில் பிரச்சினைகள் ஒவ்வொன்றாக தீர்க்கப்பட்டு வருகின்றன.அனைத்து பிரச்சினைகளையும் ஒரே தடவையில், தீக்க இயலாது.என்றாலும் அனைத்து பிரச்சினைகளையும் தீர்ப்பதற்கு அனைவரது ஒத்துழைப்பும் அவசியம் எனவும் ஜனாதிபதி குறிப்பிட்டார்.





